அரசு கடன் பத்திரங்கள் : பாதுகாப்பான முதலீடு
அரசு கடன் பத்திரங்கள் : பாதுகாப்பான முதலீடு கடந்த இரு ஆண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசு நிதி நிறுவனங்கள் வெளியிட்ட கடன் பத்திரங்கள் தர மதிப்பீட்டு பிரச்சினைகளை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் பதற்றத்தில் இருக்கின்றனர்.கடன் பத்திர முதலீட்டில் பாதுகாப்பும் அதே சமயத்தில் ஓரளவு லாபமும் அடையவேண்டுமென்றால் ரிசர்வ் வங்கி வெளியிடும் `இந்திய அரசு 8 சதவீத கடன் பத்திரங்கள்-2003ல்’ முதலீடு செய்யலாம். தற்போது வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் சூழ்நிலையில், அரசு வெளியிடக் கூடிய கடன் பத்திரங்களுக்கு 8 சதவீத வட்டி விகிதம் என்பது கவரக்கூடியதாக இருக்கிறது. என்எஸ்சி, கேவிபி, அஞ்சலக 5 ஆண்டு டெபாசிட் திட்டம் உட்பட அரசால் வெளியிடப்படும் மற்ற கடன் பத்திரங்கள் ஆகியவை கிட்டத்தட்ட கால வரையறை கொண்டுள்ளன. இந்த திட்டங்களுக்கு 8 சதவீதத்துக்கும் குறைவாகவே வட்டி வழங்கப்படுகிறது. 10 முதல் 20 சதவீதம் வரை வரி அமைப்பில் உள்ள முதலீட்டாளர்கள் ஆறு ஆண்டுகளுக்கு தங்களது பணத்தை எடுக்காமல் முதலீடு செய்ய விரும்பினால் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். நன்மைகள் `8 சதவீத கடன் பத்திரங்கள்-2...