சந்தேகம் சரியா? செல்போன் கோபுரக் கதிர்வீச்சால் புற்றுநோய் வருமா?
ஓவியம்: வெங்கி எ ன் வீட்டுக்கு அருகில் செல்போன் கோபுரம் அமைக்கிறார்கள். அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் புற்றுநோய் வரும் என்று கேள்விப்பட்டேன். இது சரியா? “செல்போன் கோபுரத்திலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் மனித இனம், பறவை, விலங்கு, தாவரம் போன்றவற்றின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. விலங்குகளுக்கோ மனிதருக்கோ புற்றுநோய் ஏற்படுகிறது” எனச் சொல்வதற்கு இதுவரை ஆதாரம் இல்லை. ஆனால், “இந்தக் கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சின் அளவைப் பொறுத்து, பிற்காலத்தில் மனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது” எனப் புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்யும், உலக சுகாதார நிறுவனத்தின் துணை அமைப்பான ‘பன்னாட்டுப் புற்றுநோய் ஆராய்ச்சி முனையம்’ (International Agency for Research on Cancer) எச்சரித்துள்ளது. காரணம், இந்தக் கதிர்வீச்சின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் பல குழப்பங்கள் உள்ளன. இந்த விஷயத்தில் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு அளவு, நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் மிகவும் குறைவான அளவிலேயே...