அசுர வளர்ச்சியில் இணையதள துறை
உலகை ஒற்றை விரலில் சுருக்கிய இணையதளத்தை இந்த நூற்றாண்டின் அறிவியல் புரட்சி என்று கூறமுடியும். இணையதளம் இன்று மிகப் பெரிய துறையாக வளர்ந்து வருகிறது. இணையதளத்தை அடிப்படையாக கொண்டு இ-காமர்ஸ், வங்கித்துறை, நிதிச்சேவைகள், தொலைத்தொடர்பு துறை என பல்வேறு துறைகள் மிகப் பெரிய அளவிற்கு வளர்ந்து வருகிறது. 2020-ம் ஆண்டில் இந்தியாவின் இணையதள துறை 25,000 கோடி டாலர் அளவுக்கு வளரும் என்று சமீபத்தில் டிஐஇ மற்றும் பிசிஜி ஆய்வில் தெரியவந்துள்ளது.
முக்கியமாக இ-காமர்ஸ் துறை நல்ல வளர்ச்சியை எட்டும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில ஆண்டுகளில் 1 மாதத்திற்கு 300 ரூபாயில் 15 முதல் 30 ஜிபி வரை மொபைல் இணையதள டேட்டா சேவை கிடைக்கும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மொபைல் டேட்டா சேவையின் வேகம் இந்த துறையை மேலும் வலுப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இணையதள துறையை பற்றி சில தகவல்கள்….
2016-ம் ஆண்டில் இணையதள பொருளாதாரம் (ஜிடிபி சதவீதத்தில்)
> இங்கிலாந்து 12.4
> தென் கொரியா 8
> சீனா 6.9
> இயு-27 5.7
> ஜப்பான் 5.6
> அமெரிக்கா 5.4
> ஜி-20 நாடுகள் 5.3
> இந்தியா 5
> மெக்ஸிகோ 4.2
# 2020-ம் ஆண்டுக்குள் 4ஜி பயன்பாடு உள்ள ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 550 மில்லியனாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 70 சதவீத மக்கள் 4ஜி சேவையை பயன்படுத்துவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
# 2015-ம் ஆண்டு தகவல் படி இந்தியாவில் இண்டர்நெட் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை 35 கோடி
# 2020-ம் ஆண்டு இந்தியாவில் இண்டர்நெட் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 73 கோடி உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இணையதள பொருளாதார காரணிகளின் மதிப்பு (டாலரில்)
> இ-காமர்ஸ் மற்றும் நிதிச் சேவைகள் - 2,000 கோடி
> டிஜிட்டல் மீடியா மற்றும் விளம்பரங்கள் – 1,500 கோடி
> எலெக்ரானிக் பொருட்கள் –2,500 கோடி
> இணைப்புகள் (மொபைல் இணைப்புகள் மற்றும் பிராட்பேண்ட்) – 1,000 கோடி

அதிக இணையதள பயனாளிகளின் எண்ணிக்கையை கொண்ட நாடுகள்
நாடு
|
இண்டர்நெட் பயனாளிகள்
|
மொத்த மக்கள் தொகை
|
சீனா
|
72,14,34,547
|
138,23,23,332
|
இந்தியா
|
46,21,24,989
|
132,68,01,576
|
அமெரிக்கா
|
28,69,42,362
|
32,41,18,787
|
பிரேசில்
|
13,91,11,185
|
20,95,67,920
|
ஜப்பான்
|
11,51,11,595
|
12,63,23,715
|
ரஷ்யா
|
10,22,58,256
|
14,34,39,832
|
# நாட்டில் உள்ள மக்கள் தொகையில் அதிக இணையதள பயனாளிகளை கொண்ட நாடு ஐஸ்லாந்து
# ஐஸ்லாந்து நாட்டின் மொத்த மக்கள் தொகை 3,17,351
# மொத்த மக்கள் தொகையில் 3,06,402 பேர் இணையதள பயனாளிகளாக உள்ளனர்.

1. அமேசான் - அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் இ-காமர்ஸ் துறையில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமாக இயங்கி வருகிறது. மொத்தம் 3,41,000 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 13,598 கோடி டாலர்
2. கூகுள் - அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தை மையமாக கொண்டு இயங்குகிறது. மொத்தம் 57,100 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 8946 கோடி டாலர்
3. பேஸ்புக் - சமூக வலைதள நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக உள்ளது. நிறுவனத்தின் மொத்த வருமானம் 2763 கோடி டாலர். மொத்தம் 17,048 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
4. டென்சென்ட் - சீனாவின் குவாங்டாங் நகரத்தை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம். சீனாவின் மிகப் பெரிய சமூக வலைதள நிறுவனமாக உள்ளது. நிறுவனத்தின் மொத்த வருமானம் 1584 கோடி டாலர்
5. அலிபாபா - சீனாவை செயிசாங்க் நகரத்தை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம் இ-காமர்ஸ், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை, ஆன்லைன் மூலமாக ஏலம் போன்ற துறைகளில் இயங்கி வருகிறது. மொத்தம் 36,446 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். நிறுவனத்தின் மொத்த வருமானம் 1229 கோடி டாலர்.
Comments
Post a Comment