வீட்டுக்கடன் வாங்க சரியான நேரம்!
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிவிக்கும் சமயத்தில் ஒவ்வொரு வருக்கும் ஒருவிதமான எதிர்பார்ப்பு இருக்கும். கடன் வாங்கியவர் ரெபோ விகிதத்தை குறைக்க வேண்டும் என்றும், டெபாசிட் செய்திருப்பவர்களுக்கு குறைக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்பும் இருக்கும். ரிசர்வ் வங்கி குறைத்த அளவுக்கு வங்கிகள் வட்டியை குறைக்கவில்லை என்னும் ஏக்கமும் மக்கள் மனதில் இருக்கும்.
சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் கூட் டத்தில் வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவிலை. கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 1.75 சதவீதம் அளவுக்கு ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்திருப்பதால், இனியும் வட்டி குறைப்பு சாத்தியம் இல்லை என்பதுபோல சூசகமாக தெரிவித்திருக்கிறது.
இனியும் காத்திருக்க வேண்டாம்!
வட்டி குறையும். அதன் பிறகு வீட்டுக்கடன் வாங்கலாம் என காத் திருக்கிறீர்களா? உங்களது நம்பிக் கையை வீணடிக்க விரும்பவில்லை. ஆனால் இனியும் காத்திருப்பது நல்ல முடிவல்ல. ஓர் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட இப்போது ஒரு சதவீதம் அளவுக்கு வட்டி (எம்.சி.எல்.ஆர்) குறைந்திருக்கிறது. குறிப்பாக பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு வேகமாக வட்டி குறைந்திருக்கிறது.
பேங்க் ஆப் பரோடாவின் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8.35 சதவீதமாக இருக்கிறது. தற்போது சந்தையில் இருக்கும் வட்டி விகிதங்கள் குறை வானது. உங்களது சிபில் ஸ்கோர் அடிப்படையில் இந்த கடன் வழங்கப் படும். சரியான நேரத்தில் உங்களது இ.எம்.ஐ மற்றும் கட்டணங்களை செலுத்தி இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஸ்கோர் 760-க்கு மேல் இருக்கும். அப்படி இருந்தால் உங்களுக்கு இந்த வட்டியில் கடன் கிடைக்கும்.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 8.5 சதவீதம், யூனியன் பேங்க் ஆப் இந்தியா 8.6 சதவீதத்திலும் வீட்டுக் கடன் வழங்குகிறது. எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய வங்கிகள் 8.65 சதவீதத்தில் வீட்டுக்கடன் வழங்குகின்றன.
மாற்றிக் கொள்ளுங்கள்
2016-ம் ஆண்டு ஏப்ரலுக்கு முன்பு அடிப்படை வட்டி விகிதம் மூலம் கடனுக்கான வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த விகிதத்துக்கு மேல் வங்கிகள் தங்களது லாப வரம்பை வைத்து கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்வார்கள். ஆனால் ஏப்ரலுக்கு பின்பு எம்.சி.எல்.ஆர் என்னும் புதிய முறைக்கு வங்கிகள் மாறினர். அதாவது எம்.சி.எல்.ஆர் விகிதம் நிர்ணயம் செய்யப்படும். அதற்கு மேல் வங்கிகள் தங்களது லாப வரம்பை நிர்ணயம் செய்து வட்டி விகிதம் நிர்ணயம் செய்யும்.
இப்போது வங்கிகள் எம்.சி.எல்.ஆர் விகிதத்தை மட்டுமே மாற்றி இருக்கின்றன. அதனால் முன்பு அடிப் படை வட்டி விகிதம் இருந்த காலத்தில் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதத்தில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால் எஸ்பிஐ 0.05 சதவீதம் குறைத்து அடிப்படை வட்டி விகிதத்தை 9.25 சதவீதமாக குறைத்திருக்கிறது.
அதனால் ஏப்ரல் 2016-க்கு முன்பு கடன் வாங்கியவர்கள் புதிய விகிதத் துக்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த மாறுதலுக்கு 0.50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். (அல்லது குறைந்த பட்சம் ரூ.10,000). உதாரணத்துக்கு எஸ்பிஐ வங்கியில் 50 லட்ச ரூபாய் கடனை இன்னும் 15 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டி இருந்தால், புதிய விகிதத்துக்கு மாறிக்கொள்வதன் மூலம் வட்டித்தொகையில் 4 லட்ச ரூபாயை சேமிக்கலாம்.
ஆனால் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுதல் கட்டணம் வெவ்வேறு வடிவங்களில் இருக்கக் கூடும் என்பதை வாடிக்கையாளர் நினைவில் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் நீங்கள் வீட்டுக்கடனை முடிக்கும் தருணத்தில் இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு மீதமாகும் தொகையும் குறைவாக இருக்கும்.
அதே சமயத்தில் வேறு வங்கிக்கு மாற்றுவதாக இருந்தால், ஒரு வங்கி கடனை முன்கூட்டியே முடிக்க வேண்டும். அதன் பிறகு புதிய வங்கிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பரிசீலனை கட்டணம் 1 சதவீதம் வரை இருக்கக் கூடும். மேலும் கூடுதல் சேவை வரிகளும் இருக்கும். அதே சமயத்தில் வங்கிகள் என்னென்ன சலுகைகள் வழங்குகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.
வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை போல பணவீக்கம் உயர்ந்தால் வட்டி விகிதம் உயர்த்தப்படும். புதிய முறை யில் வட்டி விகிதம் வேகமாக குறைக் கப்பட்டதை போல வேகமாக உயர்த் தப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்காகவே புதிய முறைக்கு மாறிக் கொள்ளலாம். தற்போது அதிகமாக குறைக்கப் பட்டிருப்பதால், கிடைக்கும் பலனை வட்டி விகிதம் உயரும் போது சரி செய்து கொள்ளலாம்.
Comments
Post a Comment