வேலை.... வேலை.... வேலை....
சர்வதேச அளவில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தை கொண்ட நாடு இந்தியா. வருடந்தோறும் லட்சக்கணக்கானோர் பட்டப்படிப்பு முடித்து வெளிவருகின்றனர். ஆனால் அனைவருக்கும் வேலை கிடைத்து விடுகிறதா என்றால் மிகப் பெரிய கேள்வி குறியாக இருக்கிறது. கடந்த வருடத்தில் வேலையின்மை விகிதம் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. படித்தவர்கள் மட்டுமல்லாமல் படிப்பறிவு அல்லதவர்களுக்கு வேலை கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதிபடுத்துவதற்கு `மேக் இன் இந்தியா’, `ஸ்கில் இந்தியா’ என பல்வேறு திட்டங்கள் கொண்டுவந்தாலும் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. அடுத்த இரண்டு, மூன்று வருடங்களில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. தற்போது ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டு வருகிறது. இதுபோன்று பெரிய அளவிலான உற்பத்தி ஆலைகளை அமைப்பதை ஊக்கப்படுத்தினால்தான் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியும். இந்தியாவில் வேலையின்மை, அதிகம் வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய துறைகள் பற்றி சில தகவல்கள்…
ஐக்கிய நாடுகள் சபையின் தொழிலாளர் அமைப்பு தகவலின் படி இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை
> 2016-ம் ஆண்டு 1.70 கோடி
> 2017-ம் ஆண்டு 1.80 கோடியாக உயரும் என கணித்துள்ளது.
# 2016-ம் ஆண்டில் 1.30 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
# அசோசேம் கணிப்புப்படி 2020-ம் ஆண்டு இந்தியாவில் ஊழியர்களின் எண்ணிக்கை 170 மில்லியன்.
# அடுத்த மூன்று வருடங்களில் உலகளவில் உள்ள புதிய ஊழியர்களின் இந்தியர்களின் பங்கு 25 சதவீதம்
# 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் கல்வியறிவு பெறாதவர்களில் 7.23% பேருக்கு வேலை இல்லை. கல்வியறிவு பெற்றவர்களில் 10.98% பேருக்கு வேலை இல்லை.
இந்தியாவில் வேலையின்மை விகிதம்
> 2011-2012- 3.8 சதவீதம்
> 2012- 2013- 4.7 சதவீதம்
> 2013-2014- 4.9 சதவீதம்
> 2015-2016 - 5 சதவீதம்
> 2015-16-ம் ஆண்டு வேலையில்லாத பெண்களின் விகிதம் 8.7 சதவீதம்
> 2015-16-ம் ஆண்டு வேலையில்லாத ஆண்களின் விகிதம் 4.3 சதவீதம்
வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ள மாநிலங்கள்
(1000 பேரில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை)
> கோவா - 106
> திரிபுரா - 116
> கேரளா - 118
> அருணாச்சலப் பிரதேசம் – 140
> சிக்கிம் - 158
வேலையின்மை விகிதம் குறைவாக உள்ள மாநிலங்கள்
(1000 பேரில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை)
# குஜராத் – 12
# கர்நாடகா – 18
# மகாராஷ்டிரா – 28
# சண்டிகர் – 28
# மத்திய பிரதேசம் – 29
# தெலங்கானா – 33
2015-2016-ம் ஆண்டில் துறை வாரியான வேலைவாய்ப்பு வளர்ச்சி (job growth trends)
# தகவல் தொழில்நுட்பம் – 28 சதவீதம்
# எண்ணெய் மற்றும் எரிவாயு - -13 சதவீதம்
# காப்பீடு துறை - 28 சதவீதம்
# பார்மா – 12 சதவீதம்
# பிபிஓ – 17 சதவீதம்
# டெலிகாம் – 6 சதவீதம்
# ஆட்டோ – 7 சதவீதம்
# ரியல் எஸ்டேட்- 6 சதவீதம்
# எப்எம்சிஜி – 29 சதவீதம்
> 2015-16ம் ஆண்டில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
> பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நவம்பர் மற்று டிசம்பர் மாதங்களில் வேலைவாய்ப்பு 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
> 2017-ம் ஆண்டில் முறைப்படுத்தப்பட்ட தொழிலில் 8.75 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
வேலையில்லாத வளர்ச்சி
இந்தியா வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் பொருளாதார வளர்ச்சி கணிசமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பொருளாதாரம் உயர்ந்து ஆனால் வேலையின்மை அதிகரித்துக் கொண்டே வருவதைத்தான் வேலையில்லாத வளர்ச்சி (Jobless Growth) என்று கூறப்படுகிறது.
வேலையில்லாத வளர்ச்சிக்கு காரணங்கள்
1. தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலையின்மை ஏற்படுவது
2. உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு குறைவது
3. சேவைத் துறை அதிகமாக வளர்ச்சி பெறுவது
4. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் அரசு அதிக கவனம் செலுத்தாதது.
Comments
Post a Comment