வெள்ளை தங்கம்!
டிஜிட்டல் மயமாக்கம் பல துறைகளில் பாதிப்பு ஏற்படுத்திருக்கிறது. குறிப்பாக `வெள்ளை தங்கம்’ என அழைக்கப்பட்ட காகித துறையில் டிஜிட்டல் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். சர்வதேச அளவில் காகிதத்துக்கான தேவை குறைந்து வந்தாலும், இந்தியாவில் அதற்கான தேவை இன்னும் பெரிய அளவில் சரியவில்லை. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருப்பதால் அவர்களின் கல்வித் தேவைக்கு காகிதங்களின் பங்களிப்பு அவசியம் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த துறையின் தற்போதைய நிலை, சிக்கல்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனமான டிஎன்பிஎல் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கரூரில் இருக்கும் ஆலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி 400 டன் உற்பத்தி குறைந்திருக்கிறது.
இந்தியாவின் முக்கியமான நிறுவனமான பல்லார்பூர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் தவிக்கிறது. இதனால் பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம், பல்லார்பூர் நிறுவனத்தின் தகுதிச்சான்றை `சி’ நிலைக்கு குறைத்திருக்கிறது.
இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள 60 காகித நிறுவனங்கள் கடந்த 12 மாதங்களில் 9.9 கோடி டாலர் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளன.
இந்தியாவில் ஒரு டன் மரம் 100 டாலர். ஆனால் மற்ற நாடுகளில் 40 டாலருக்கு மரம் கிடைக்கும். அதனால் இறக்குமதிக்கு வரி விதிக்க வேண்டும் என ஐஎம்பிஏ கோரிக்கை விடுத்திருக்கிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான ஐடியா காகிதமாகும்.
1812-ம் ஆண்டு இந்தியாவில் முதல் முதலாக இயந்திரங்கள் மூலம் காகிதம் உற்பத்தி செய்யப்பட்டது.
50000 கோடி இந்த துறையின் ஆண்டு வருமானம்.
5 லட்சம் நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளையும், 15 லட்சம் நபர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்புகளை அளித்து வருகிறது.
தேவையற்ற காகிதம் மூலப்பொருளாக இருந்தாலும், இந்த பிரிவு முற்றிலும் முறைப்படுத்தப்படாமல் இருப்பதால் தேவையற்ற காகிதம் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. பயன்படுத்தப்படும் காகிதத்தில் 25 சதவீதம் மட்டுமே நிறுவனங்களுக்கு மீண்டும் மறு சுழற்சிக்கு கிடைக்கின்றன. ஆண்டுக்கு 60 லட்சம் டன் தேவையற்ற காகிதத்தை வெளிநாடுகளில் இருந்து காகித நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன.
கோடி டன் காகிதம் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. வரும் 2026-ம் ஆண்டு 4 கோடி டன் காகிதம் தேவைப்படும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
60 ரீம் (டபுள் டெமி) காகிதத்தில் எழுதப்படும் தகவல்களை 700 எம்பி சிடியில் சேகரிக்க முடியும்.
இந்தியாவில் இளைஞர்கள் அதிகமாக இருப்பதால் கல்விக்காக காகிதத்தின் பயன்பாடு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு ஆண்டுகளுக்கு சர்வதேச அளவில் காகித துறையின் வளர்ச்சி 2 முதல் 4 சதவீதம் இருக்கும் என மூடி’ஸ் கணித்திருக்கிறது.
ஏற்கெனவே மூலப்பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே சென்றாலும், ஆசிய பிராந்திய நாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரித்து வருவதால் உள்நாட்டு நிறுவனங்கள் சிக்கலில் உள்ளன. இதனால் இறக்குமதி வரியை 15 சதவீதம் உயர்த்த இந்திய காகித உற்பத்தியாளர்கள் சங்கம் (ஐஎம்பிஏ) கோரிக்கை விடுத்திருக்கிறது.
உலகின் மொத்த காகித உற்பத்தியில் பாதியை அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து கிடைக்கிறது. ஆண்டுக்கு 40 கோடி டன் காகிதத்தை உற்பத்தி செய்கின்றன.
உலக காகித உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 3%
1702-ம் ஆண்டு உலகின் முதல் காகித செய்திதாள் The Daily Courant இங்கிலாந்தில் வெளியானது.
1960 களில் இந்தியர்களின் சராசரி காகித நுகர்வு ஆண்டுக்கு 2 கிலோ மட்டுமே. அப்போது சர்வதேச சராசரி 35 கிலோ. ஆனால் தற்போது இந்தியர்களின் பயன்பாடு 13 கிலோவாக உயர்ந்திருக்கிறது. ஆனால் சர்வதேச சராசரி 57 கிலோ. அமெரிக்க நுகர்வு 350 கிலோவுக்கு மேல். தனிநபர் நுகர்வு ஒரு கிலோ உயரும் போது, தேவை 10 லட்சம் டன்னாக உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க சரிவு
1990களில் அமெரிக்காவில் 9 கோடி டன் காகிதம் தேவைப்பட்டது. ஆனால் இப்போது 6 கோடி டன் போதும். வருங்காலத்தில் மேலும் இது குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
Comments
Post a Comment