அலசல்: ஆயுள் காப்பீட்டு பாலிசியை மாற்றிக்கொள்ள முடியுமா?
அலசல்: ஆயுள் காப்பீட்டு பாலிசியை மாற்றிக்கொள்ள முடியுமா?
ஒரு பொருள் அல்லது சேவையை வாங் கும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு வாய்ப்புகள்தான் முன்பு வழங்கப்பட்டிருந்தன. ஒன்று பொருள்/சேவையை பயன்படுத்து வது அல்லது அதனைக் கைவிடுவது. சில ஆண்டு களுக்கு முன்பு மூன்றாவ தாக ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டது. அது சேவை பிடிக்கவில்லை என்றால் நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் வசதி.
கடந்த 2011-ம் ஆண்டு தொலைத் தொடர்புத்துறையில் மொபைல் எண் மாறாமல் நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் ‘போர்டபிலிட்டி’ வசதி கொண்டுவரப்பட்டது. அதேபோல மருத்துவக் காப்பீட்டு பிரிவிலும் நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது.
தற்போது ஆயுள் காப்பீட்டு பிரிவிலும், நிறுவனத்தை மாற்றிக்கொள்வது குறித்து ஐஆர்டிஏ பரிசீலனை செய்து வருவதாகத் தெரிகிறது. தற்போது ஆயுள் காப்பீட்டு பாலிசி பிடிக்கவில்லை என்னும் பட்சத்தில் அந்த பாலிசியை சரண்டர் செய்து பிரீமியமாக செலுத்திய தொகையை வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அதிகபட்சம் 70% தொகையை நிறுவனங்கள் பிடித்துக்கொள்ளும். பாலிசியை மாற்றிக்கொள்வதன் மூலம் சலுகைகளை தொடரலாம் என்பது பொதுவான எண்ணமாகும். ஆனால் நடைமுறையில் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை மாற்றுவதென்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
தொலைத்தொடர்பு துறையில் நிறுவனங்களை மாற்றிக்கொள்வது என்பது மிகவும் எளிது. அங்கு முக்கிய குறிக்கோள், எண் மாறாமல் இருப்பதுதான். நிறுவனத்தை மாற்றிக்கொண்ட பிறகு அங்குள்ள திட்டங்களுக்கு ஏற்ப தொகை செலுத்தினால் போதுமானது. அதேபோல மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பிரிவின் காலமும் ஓர் ஆண்டு(அல்லது மிக குறுகிய காலம்) என்பதால் அங்கு நிறுவனங்களை மாற்றிக்கொள்வதில் எந்த சிரமும் இருக்கவில்லை.
ஆனால் ஆயுள் காப்பீட்டு பிரிவில் டேர்ம், யூலிப், ஓய்வூதியம் உள்ளிட்ட பலவகையான பாலிசிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் நீண்ட கால பாலிசிகள் ஆகும். தவிர ஒவ்வொரு நிறுவனமும் ஒரு வகையான பாலிசியில் வேவ்வேறு விதமான சலுகைகளை வழங்குகின்றன.
தவிர ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு பாலிசியை மாற்றிக் கொள்ளும்பட்சத்தில், பழைய நிறுவனத்தில் தொகையை மாற்ற வேண்டும். உதாரணத்துக்கு 20 ஆண்டுகளுக்கு மணிபேக் பாலிசியை எடுத்துவிட்டு ஐந்தாண்டுகளுக்கு பிறகு நிறுவனம் மாறுகிறார் என்றால் கடந்த 5 ஆண்டுகள் கட்டிய தொகையை புதிய நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும். இந்த தொகையை எப்படி செலுத்துவது எப்படி பிரிப்பது என்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. தவிர ஒரு வாடிக்கையாளரைக் கொண்டு வருவதற்கு நிறுவனங்கள் அதிகம் செலவு செய்யும். ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்துக்கு செல்லும் பட்சத்தில் ஒரு நிறுவனத்துக்கு சாதகமாகவும், மற்ற நிறுவனத்துக்கு பாதகமாகவும் அமைய வாய்ப்பு இருக்கிறது.
அதேசமயம் டேர்ம் பாலிசி உள்ளிட்ட சில நிலையான சலுகைகள் இருக்கும் பாலிசிகளில் மட்டும் நிறுவனத்தை மாற்றிக்கொள்வதற்கான சாத்தியம் இருக்கிறது. நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் வசதி வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர் நலன் பாதுகாக்கப்படும், வெளிப்படையான சந்தை உருவாகும், சேவை உயர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் ஆயுள் காப்பீட்டு பிரிவில் சாத்தியமாகும் வாய்ப்புகள் குறைவு. நிறுவனங்களின் பாலிசியை ஒழுங்குபடுத்துவது, கட்டணங்களை சீர் செய்வது போன்றவற்றால் இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு எடுக்கப்படும் பாலிசிகளில் நிறுவனங்களை மாற்றுவது சாத்தியமாகலாம்.
Comments
Post a Comment