ஆதார் எண் மூலம் பணப் பரிமாற்றம்


பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியிலிருந்து அனைத்து வகையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் அதிகரித்து வருகின்றன. யுபிஐ பரிவர்த்தனை, பேடிஎம் போன்ற மொபைல் வாலெட்டுகள் எல்லா நிலைகளிலும் புழக்கத்துக்கு வந்துள்ளன. வாடிக்கையாளர்கள் அளித்த நெருக்கடிகள் அல்லது பணமற்ற பொருளாதாரத்தை நோக்கி நகர்தல் போன்றவை இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இந்த வகையில் மின்னணு பரிவர்த்தனையின் அடுத்த கட்டமாக வர்த்தகர்களுக்கு உதவ உள்ளது ஐடிஎப்சிவங்கியின் ஐடிஎப்சி ஆதார் பே. நாட்டில் முதன் முதலில் ஆதார் எண்ணுடன் இணைக்கப் பட்ட மின்னணு பரிவர்த்தனை முறை இது.
வர்த்தகர்களுக்கு எப்படி உதவும்
ஐடிஎப்சி ஆதார் பே யின் முக்கிய நோக்கமே சிறு வர்த்தகர்கள் பணமற்ற வர்த்தகத்துக்கு மாறுவதற்காக உதவுது தான். ஐடிஎப்சி வங்கியின் `கரண்ட் அக்கவுண்ட்’ வங்கிக் கணக்கும் ஸ்மார்ட் போனும் போதும். வங்கி வர்த்தகர்களை நேரடியாக சந்தித்து ’ஸீரோபேலன்ஸ் கரண்ட் அக்கவுண்ட்’டை தொடங்க வைக்கிறது. இதன் மூலம் கேஒய்சி விவரங்களையும் நேரடியாகவே தெரிந்து கொள்கிறது. இந்த புதிய வங்கி கணக்கு ஆதார் பே செயலியுடன் இணைக்கப்படுகிறது. இந்த செயலி ஐடிஎப்சி இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். இதர செயலிகளை தரவிறக்கம் செய்வதுபோல கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து எடுத்துக் கொள்ள முடியாது. இந்த வேலைகள் முடிந்ததும். வர்த்தகர்களுக்கு ஸ்மார்ட்போனில் இணைத்துக்கொள்வதுபோல பயோ மெட்ரிக் கருவி ஒன்று அளிக்கப்படுகிறது. இந்த கருவிதான் வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிலிருந்து வர்த்தகருக்கு பணத்தை மாற்றும் விதமாகச் செயல்படுகிறது. வர்த்தகர்கள் இந்தக் கருவியை விலை கொடுத்து வாங்க வேண்டும். இது ரூ.1,800 முதல் ரூ. 2,500 வரையில் விற்கிறது.
எப்படி செயல்படுகிறது
ஆதார் எண் இப்போது ஒவ்வொரு வரின் வங்கிக் கணக்கிலும் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் எங்கும் பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம். வர்த்தகரின் ஸ்மார்ட்போனுடன் இந்த கருவி இணைக்கப்பட்டிருக்கும். ஆதார் பே செயலியில் வாடிக்கையாளர் தனது ஆதார் எண்ணையும், வங்கி பெயரையும்குறிப்பிட்டு, எவ்வளவு தொகை என்பதையும் குறிப்பிட வேண்டும். அதன்பிறகு அந்தக் கருவியில் தனது விரல் ரேகையை அழுத்தினால் பரிவர்த்தனை நொடியில் முடிந்துவிடும். வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய பணம் வர்த்தகருக்குச் சென்றுவிடும்.
பயன்கள்
முழுமையான பாதுகாப்பானது. மொபைல் வாலெட், டெபிட், கிரெடிட் கார்டைவிட அதிக பாதுகாப்பான பரிவர்த்தனை முறை என்று துறை சார்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.வாலெட் பயன்படுத்துபவர்களுக்கு உள்ள சிக்கல் என்றால் மொபைல் தொலைந்து விட்டால் அதில் உள்ள உங்கள் பணத்துக்கு பாதுகாப்பில்லை. கைரேகை பாதுகாப்பு அப்படியில்லை. நீங்கள் நினைத்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
உங்கள் கார்டையோ, மொபைலையோ தொலைத்துவிட்டு அதற்காக நீங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் செய்து பேசிக் கொண்டிருப்பதைவிட கைவிரல் ரேகை அதிக பாதுகாப்பு நிறைந்தது என்கிறார் கேபிஎம்ஜி பங்குதாரர் குனால் பாண்டே.
இரண்டாவது முக்கியமான விஷயம் ஆதார் வழி பரிமாற்ற முறையில் பரி வர்த்தனைக்கான கட்டணம் கிடையாது. ஆனால் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரம் வழியாக டெபி கார்டையோ, கிரெடிட் கார்டையோ பயன்படுத்தும் பட்சத்தில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சேவை கட்டணம் செலுத்த வேண்டியிருக்க லாம். பொதுவாக கார்டு முறை ஊக்கு விப்பது வங்கிகளுக்கு அதிக செலவு வைக்கிறது. கார்டுகளை மறு விநியோ கம் செய்வதை வங்கிகள் ஊக்குவிப்ப தில்லை. ஆனால் சில வாடிக்கையாளர் களின் தேவைக்கு ஏற்ப விநியோ கிக்கிறது.
பாதகங்கள்
பொதுவாக சிறு வர்த்தகர்களிடத்தில் சில்லரையாக அதிக வர்த்தகம் நடக்கும். இதற்காக எப்போதும் சீரான இணைய வேகம் இருக்க வேண்டும். பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பதியவில்லை என்றாலும் வர்த்தகர்கள் தேவையில்லாமல் வாடிக்கையாளர்களிடத்தில் வாக்கு வாதம் செய்ய வேண்டும்.
பிற நகரங்களில் மட்டுமல்ல, மெட்ரோ நகரங்களில்கூட இணைய வேகம் சில இடங்களில் மெதுவாகவே உள்ளது. இதனால் பரிவர்த்தனைக்கான நேரம் அதிகம் எடுக்கும். பரிவர்த்தனை இடையில் கட் ஆனால் மீண்டும் முதலிலிருந்து எல்லா வேலைகளையும் தொடங்க வேண்டும். இதனால் வாடிக்கையாளர் கடைக்காரகள் இருவருக்குமே நேரம் சிக்கலாகும். தவிர சிறு கடைகளில் முக்கிய அம்சமே வேகம்தான். எனவே கடைக்காரகள் இதைவிடவும் வேகமான பரிவர்த்தனை முறையான பணத்தை கையளுவதையே விரும்புவர்.
இதற்காக பரிவர்த்தனைக் கட்டண மும் கிடையாது. அதே நேரத்தில் கிரெ டிட் டெபிட் கார்டுகளுக்கு பரிவர்த் தனைக் கட்டணம் இருப்பதால் வர்த் தகர்களுக்கு அதன் மூலம் எந்த நஷ்ட மும் இருக்கப்போவதில்லை. என்கிறார்
முக்கியமாக கிரெடிட் டெபிட் கார்டு, மொபைல் எண் எடுத்துச் செல்லவில்லை என்றால் ஆதார் எண் மூலம் பரிவர்த்தனை செய்யலாம். ஆனால் கிரெடிட் டெபிட் கார்டுகளுக்கான 4 இலக்க பாஸ்வேர்டை ஞாபகம் வைத்துக் கொள்வதைவிடவும் 12 இலக்க ஆதார் என்ணை ஞாபகம் வைத்துக் கொள்வது எளிதானதல்ல.

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்