சமூக வலைதள பயன்பாடு: இந்தியா முதலிடம்

சமூக வலைதள பயன்பாடு: இந்தியா முதலிடம்

சமூக வலைதளங்கள் தொழில்நுட்ப உலகில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. கணினி வந்த பிறகு எப்படி ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்ததோ அதேபோல் சமூக வலைதளங்கள் வந்த பிறகு மிகப் பெரிய சமூக மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடியாக கருத்துகளை பதிவு செய்வதிலிருந்து மிகப் பெரிய போராட்டமாக மாறுவது வரை சமூக வலைதளங்களின் பங்களிப்பு அதிகம். நாளுக்கு நாள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

Comments