வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்கள்
சில தினங்களுக்கு முன் வாழ்வை சிறப்பாக ஏற்ற நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரம் தொடர்ந்து எட்டாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த நகரங்கள் அனைத்துமே மிகப் பெரிய சுற்றுலா தளங்களாக இருக்கின்றன. அதேபோல தொழில்வளர்ச்சி, கல்வி, பொழுதுபோக்கு அம்சங்கள், வேலைவாய்ப்பு என அனைத்துமே இருக்கிறது. முக்கியமாக ஒவ்வொரு நகரத்துக்கும் தனிச்சிறப்பு இருக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ள முக்கிய நகரங்களை பற்றிய சில தகவல்கள்…
வியன்னா , ஆஸ்திரியா

> 8-வது முறையாக வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது வியன்னா.
> ஆஸ்திரியாவின் தலைநகரமான வியன்னாவின் மொத்த பரப்பளவு 160.10 சதுர கிலோ மீட்டர்.
> இங்கு வசிக்கும் மக்கள் தொகை 18,67,960
> இந்த நகரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 110 பில்லியன் டாலர்
> இந்த நகரத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 63,000 டாலர்
> 2001-ம் ஆண்டு சிட்டி ஆப் வியன்னாவை சர்வதேச கலாச்சார
> மையமாக யுனஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.
> சிட்டி ஆப் டீரிம்ஸ் மற்றும் சிட்டி ஆப் மியூசிக் என்று அழைக்கப்படும் வியன்னா நகரத்தில் உலகின் தலைச்சிறந்த இசையமைப்பாளர்கள் வாழ்ந்துள்ளனர்.
ஜூரிச், சுவிட்சர்லாந்து

> சுவிட்சர்லாந்த் நாட்டின் முக்கியமான நகரம் ஜூரிச்.
> இந்த நகரத்தின் மொத்த பரப்பளவே 87. 88 கிலோ மீட்டர்2
> 2015-ம் ஆண்டின் படி இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகை 3,96,027
> சுவிட்சர்லாந்த் நாட்டின் முக்கிய நிதி நகரமாக ஜூரிச் உள்ளது.
> ஏபிபி, யுபிஎஸ், சுவிஸ் ரே போன்ற முக்கிய நிறுவனங்களின் தலைமை அலுவலகம் ஜூரிச் நகரத்தில்தான் உள்ளது.
> முக்கியமாக கல்வி, பாதுகாப்பு போன்ற அம்சங்களில் ஜூரிச் நகரம் சிறந்து விளங்குகிறது.
> உலகின் அதிக செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் ஜூரிச் நகரத்தின் இடம் 6
முனிச், ஜெர்மனி

> ஜெர்மனி நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக முனிச் உள்ளது.
> இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகை 14,50,381
> பிஎம்டபிள்யூ, சீமென்ஸ் போன்ற தொழில் நிறுவனங்களின் தலைமையிடம் இந்த நகரத்தில் உள்ளன.
> இந்த நகரத்தின் மொத்த பரப்பளவு 310 கிலோ மீட்டர்2
> முனிச் நகரத்தில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் மட்டும் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 34,500
> ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் அதிகம் வசிப்போர் துருக்கியர்கள்
வான்குவர், கனடா

> வான்குவர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 6,31,486
> இந்த நகரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 109.8 பில்லியன் டாலர்.
> இந்த நகரத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 44. 337
> வட அமெரிக்கா பிராந்தியத்தில் கப்பல் வழியாக ஏற்றுமதி அதிகம் நடைபெறும் துறைமுகம் வான்குவர்.
> நோக்கியா, மைக்ரோசாப்ட், இண்டெல், அமேசான், நெட்ஆப் ஆகிய நிறுவனத்தின் செயல்பாட்டு பிரிவுகள் வான்குவர் நகரத்தில் உள்ளன.
கோபன்ஹேகன், டென்மார்க்

> டென்மார்க் நாட்டின் தலைநகரம் கோபன்ஹேகன்
> இந்த நகரத்தின் மொத்த பரப்பளவு 615.7 கிலோமீட்டர்2
> மொத்த மக்கள் தொகை 7,63,908
> ஆண்டிற்கு கோபன்ஹேகன் நகரத்திற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
> உலகத்தில் மிக மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய நகரத்தின் பட்டியலில் கோபன்கேஹன் நகரம் முதலிடத்தில் உள்ளது.
> இந்த நகரத்தில் மொத்தம் 3,07,000 வேலைவாய்ப்புகள் உள்ளன.
> டென்மார்க் நகரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கோபன்ஹேகன் நகரத்தின் பங்கு 15 சதவீதம்
> உலகின் மிகப் பழமையான இரண்டாவது கேளிக்கை பூங்கா இந்த நகரத்தில் உள்ளது.
> இந்நகரத்தில் 55 சதவீதம் ஊழியர்கள் பணிக்குச் சைக்கிள் மூலமாக பணிக்குச் செல்கிறார்கள்.
சிட்னி, ஆஸ்திரேலியா

> ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக சிட்னி உள்ளது.
> இந்த நகரத்தின் மொத்த பரப்பளவு 12,367 கிலோமீட்டர்2
> 2015-ம் ஆண்டின் தகவலின் படி மொத்த மக்கள் தொகை 49,21,00
> வாழ்வதற்கு அதிக செலவாகும் நகர பட்டியலில் சிட்னி நகரத்தின் இடம் 15
> 2011-ம் ஆண்டு நிலவரப்படி சிட்னியின் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 21,88,854
> ஒபேரா ஹவுஸ், சிட்னி டவர், குயின் விக்டோரியா பில்டிங்க் ஆகியவை சிட்னியின் முக்கிய சுற்றுலா இடங்கள்.
Comments
Post a Comment