மொபைல் விளையாட்டு
மொபைல் விளையாட்டு
சமீபத்தில் புளூவேல் என்ற மொபைல் விளையாட்டு தமிழக சிறுவர்களை அச்சுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக மொபைல் விளையாட்டை பற்றி படித்துப் பார்த்தபோது பல்வேறு விஷயங்கள் தெரியவந்தன. மொபைல் விளையாட்டு என்பது சர்வதேச அளவில் மிகப் பெரிய சந்தை. புளூவேல் மட்டுமல்லாமல் பல நூறு விளையாட்டுகளை நிறுவனங்கள் அறிமுகப்படுத்திவருகின்றன. விறுவிறுப்பாகவும் மிக சவாலாகவும் இருப்பதால் இந்த விளையாட்டுகளை விளையாடுவதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுதான் இந்த நிறுவனங்களின் வெற்றி. சில ரிஸ்கான விளையாட்டுகளை தவிர மூளைக்கு பயிற்சி தரும் விளையாட்டுகளும் நிறைய இருக்கின்றன. அவற்றை விளையாடுவது மூலம் நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தத்துறையில் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. கூகுள், ஆப்பிள் என பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் சந்தையை பிடிக்க போட்டி போடுகின்றன. அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகம் வருமான ஈட்டக்கூடிய துறையில் இதுவும் ஒன்றாக இருக்கும். மொபைல் விளையாட்டுத் துறை பற்றி சில தகவல்கள்..
மொபைல் விளையாட்டுகள் மூலம் வரும் வருமானம்
ஆண்டு - வருமானம் (கோடி டாலரில்)
> 2013 - 1,760
> 2014 - 2,450
> 2015 - 3,010
> 2016 - 3,560
> 2017 - 4,060
2017-ம் ஆண்டில் மொபைல் விளையாட்டுத் துறையில் அதிகம் வருமானத்தை ஈட்டிய நிறுவனங்கள்
(வருமானம் கோடி டாலரில்)
> டென்செண்ட் – 740
> சோனி – 430
> ஆக்டிவிஷன் பிளிஷார்டு - 340
> மைக்ரோசாப்ட் – 320
> ஆப்பிள் - 300
> இஏ – 300
> நெட்ஈஸ் – 290
> கூகுள் – 210
> பண்டாய் நாம்கோ – 110
> நெக்ஸான் – 100
# 2018-ம் ஆண்டில் மொபைல் விளையாட்டுகள் மூலம் வருமானம் 4500 கோடி டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
# மொபைல் விளையாட்டு வருமானத்தில் ஆசிய கண்டமே முன்னணியில் உள்ளது.
# கிட்டத்தட்ட மொத்த வருமானத்தில் 60 சதவீத வருமானம் ஆசிய கண்டத்திலிருந்து வருகிறது.
# ஆண்ட்ராய்டு மொபைல் விளையாட்டுகளின் வருமானம் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதள மொபைல் விளையாட்டு வருமானத்தை விட அதிகம்.
டென்செண்ட்
# இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1998
# மொபைல் விளையாட்டுகள் மட்டுமல்லாமல் சமூக வலைதளம், வெப் போர்ட்டல்ஸ், இ-காமர்ஸ் போன்ற துறைகளிலும் இயங்கி வருகிறது.
# ஹானர் ஆப் கிங்க்ஸ், ஹாப்பி லேண்ட்லார்டு, ஜே எக்ஸ் ஆன்லைன் போன்ற மொபைல் விளையாட்டுகள் உலக புகழ்பெற்றவை.
ஆக்டிவிஷன் பிளிஷார்டு
# அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 2008
# கால் ஆப் டுயூட்டி என்ற மொபைல் விளையாட்டை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.
# அதன்பிறகு மிகவும் பிரபலமான மொபைல் விளையாட்டுகளான வார்கிராப்ட், கேண்டி கிரஷ் சாகா போன்ற விளையாட்டுகளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது.
# 2016-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 660 கோடி டாலர்
# மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 9,500
இஏ
# எலெக்ட்ரானிக் ஆர்ட்ஸ் என்று கூறப்படும் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1982
# டிரிப் ஹாவ்கின்ஸ் என்பவரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
# ஆர்மி ஆப் வார்ஸ் என்ற வீடியோ விளையாட்டை 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
# இதுவரை 24 தொடர் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
# மிகப் பிரபலமான விளையாட்டுகள் – ஸ்டார் வார்ஸ், பிபா சீரிஸ், டெட் ஸ்பேஸ் சீரிஸ்
# மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 8,800
நெட்ஈஸ்
# சீனாவைச் சேர்ந்த நிறுவனம். இந்நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு 1997
# மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 15,948
# ஆரம்பத்தில் இணையதள தேடுபொறி துறையில் கவனம் செலுத்தி வந்தது. பின்பு ஆன்லைன் விளையாட்டுத்துறையில் இறங்கி தொடர்ச்சியாக விளையாட்டுகளை அறிமுகம் செய்தது.
# முதலில் அறிமுகப்படுத்திய மொபைல் விளையாட்டு பேண்டஸி வெஸ்ட் வேர்டு
# குங் பூ பாண்டா, தி எக்ஸ் வேர்ல்டு, ஹீரோஸ் ஆப் வார் கிராப்ட் போன்ற விளையாட்டுகள் மிக பிரபலம்
பண்டாய் நாம்கோ
# ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1955
# டோக்கியோவை மையமாக கொண்டு இயங்கிறது.
# `ஏஸ் கம்போட் ஜீரோ: தி பெலிகன் வார்’ என்ற விளையாட்டை முதன்முதலில் 2006-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
# 100-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை உருவாக்கியுள்ளது.
நெக்ஸான்
# தொடங்கப்பட்ட ஆண்டு 1994
# சியோல் நகரை மையமாக கொண்டு இயங்குகிறது
# மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 5,525
# முதன் முதலில் அறிமுகப்படுத்திய விளையாட்டு `நெக்ஸன்: தி கிங்க்டம் ஆப் தி விண்ட்ஸ்’
# கம்போட் ஆர்ம்ஸ், மேபிள் ஸ்டோரி போன்ற விளையாட்டுகள் மிக பிரபலம்
# அமெரிக்கர்கள் தினந்தோறும் மொபைலில் ஒரு விளையாட்டை விளையாடி வருகிறார்கள். மாத அடிப்படையில் பார்த்தால் 3 விளையாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடி வருகிறார்கள்.
# 2018-ம் ஆண்டில் மொபைல் விளையாட்டு விளையாடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 60 சதவீதத்தை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலக பிரபலமான போக்மோன்
# 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போக்மோன் விளையாட்டை நிண்டண்டோ என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
# முதலி ஆஸ்திரேலியா நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் நாளடைவில் மிக பிரபலமடைந்ததால் உலகம் முழுவதும் இந்த விளையாட்டை டவுன்லோடி செய்தனர்.
# அறிமுகப்படுத்திய 1 மாதத்தில் மட்டும் 10 கோடி முறை இந்த விளையாட்டை டவுன்லோடு செய்துள்ளனர்.
Comments
Post a Comment