சிஎன்ஜி-க்கு மாறுவதில் தயக்கம் ஏன்?
சிஎன்ஜி-க்கு மாறுவதில் தயக்கம் ஏன்?
சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனங்களைத் தயாரிக்க வேண்டும் என்னும் குரல் ஒருபுறம் வலுத்து வந்தாலும், சூழலைப் பாதிக்காத எரிபொருள் அதாவது நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) கிடைப்பதற்கான சூழல் உருவாக்கப்பட்ட போதிலும் அதற்கு மாறுவதில் வாகன உரிமையாளர்கள் தயங்குகின்றனர்.
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை சிஎன்ஜி-க்கு மாற்றுவதற்கு உரிய கருவிகள் பொறுத்தப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கை 6 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இவ்விதம் வாகனங்களில் மாற்றம் செய்வதில் வாகன உரிமையாளர்கள் போதிய ஆர்வம் செலுத்தவில்லை.
சிஎன்ஜி-க்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் மாறாத சூழலில் மாநிலம் முழுவதும் சிஎன்ஜி நிரப்பு மையங்களை உருவாக்க முடியாமல் திணறி வருகிறது மத்திய அரசின் இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்). 2016-ம் ஆண்டிலேயே பெங்களூர் மாநகரில் அதிக எண்ணிக்கையில் சிஎன்ஜி நிரப்பு நிலையங்களை அமைக்க திட்டமிட்டது. ஆனால் ஏற்கெனவே இயங்கி வரும் வாகனங்கள் சிஎன்ஜி மாற்றத்துக்கான கருவியை பொறுத்த முன்வராததால் விரிவாக்க நடவடிக்கைகளை கெயில் நிறுவனத்தால் எடுக்க முடியவில்லை.
மாநகர போக்குவரத்து பஸ்களை சிஎன்ஜி-க்கு மாற்றலாம் என தொடர்ந்து பெங்களூர் மாநில அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக கெயில் சிஇஓ பங்கஜ் குமார் பால் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு நகரில் மொத்தம் 67 லட்சம் வாகனங்கள் இயங்குகின்றன. ஆனால் இதுவரை 230 வாகனங்களே சிஎன்ஜிக்கு மாறியுள்ளன. கடந்த பிப்ரவரியில் கர்நாடக மாநில தொழில் முதலீட்டு மேம்பாட்டு கார்ப்பரேஷன் (கேஎஸ்ஐஐடிசி) சிஎன்ஜி-க்கு மாறுவது தொடர்பான விழிப்புணர்வை நடத்தியது. ஆனால் அதன்பிறகு இது தொடர்ந்து நடத்தப்படவில்லை. எந்த ஒரு திட்டமும் அரசின் ஒத்துழைப்போடு மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே வெற்றியடையும். சிஎன்ஜி திட்டமும் அந்த வகையைச் சேர்ந்ததே. வெற்றி பெறுவதும் கிடப்பிற்கு போவதுமே அரசின் கையில்தான் உள்ளது.
Comments
Post a Comment