அலசல்: ஜிஎஸ்டியும் தங்கமும்
அலசல்: ஜிஎஸ்டியும் தங்கமும்
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது. பல்வேறு பொருட்களின் விலை அதிகமாகியுள்ளதால் மக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். மேலும் எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு வரி என்பது இன்னும் மக்களை சென்றடையவில்லை. தங்கத்துக்கான ஜிஎஸ்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்க விற்பனையில் இறக்குமதியில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்பதை அலசிப் பார்க்கலாம்.
ஏற்கெனவே உள்ள வரி முறையில் தங்கத்துக்கு 1.2 சதவீதம் வாட் வரியும் 1 சதவீதம் கலால் வரியும் விதிக்கப்பட்டு வந்தது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தங்கத்துக்கான ஜிஎஸ்டி விகிதம் 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைவரும் எதிர்ப்பார்த்த 5 சதவீதத்தை விட குறைவுதான் என்றாலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள 3 சதவீதத்தினாலும் தங்க விற்பனை சந்தையில் மாற்றம் இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
தங்கத்தின் தேவை குறையும்
ஜிஎஸ்டி காரணமாக தங்கத்தின் தேவை இந்தியாவில் குறையும் என்று உலக தங்க கவுன்சில் கடந்த வாரம் தெரிவித்துள்ளது.பொதுவாக தங்க நகைகளை நடுத்தர வர்க்கத்தினர்தான் அதிகம் வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக ரூ.20,000 முதல் ரூ.50,000 ஆயிரத்துக்குள் நகை வாங்குபவர்கள் அதிகம். மாதாமாதம் இந்த தொகையில் நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

ஆனால் தற்போது தங்கத்துக்கான ஜிஎஸ்டி உயர்ந்துள்ளதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினரின் தங்க நுகர்வு குறையும். இதனால் குறுகிய காலத்துக்கு தங்க விற்பனையில் பாதிப்பு ஏற்படலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தங்க நகை செய்பவர்கள், சிறிய தங்க நகை வியாபாரிகள் போன்றவர்கள் இன்னும் புதிய வரி விதிப்பு முறையை கற்றுக் கொள்ளவில்லை. இது வர்த்தகர்களுக்கு மேலும் சிரமத்தை தரும்.
தங்க பத்திரத்தின் நிலை?
நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளிப்பதற்காக தங்க இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்கு மாறாக தங்க கடன் பத்திர திட்டத்தை மத்திய அரசு பிரபலப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்களில் முக்கியமானது தங்க கடன் பத்திர திட்டம். இதுவரை ரூ.5,400 கோடிக்கு தங்க கடன் பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதால் தங்க நகைகளின் நுகர்வு குறையும்.

அதுமட்டுமல்லாமல் தங்க கடன் பத்திரங்களில் முதலீடு அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர். தங்க கடன் பத்திரங்களில் வட்டி வழங்கப்படுவதன் காரணமாக இந்த திட்டத்தில் முதலீடு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியர்களின் மனதில் தங்கம் இரண்டற கலந்துவிட்டது. மக்கள் தங்கள் மனநிலையை மாற்றி கடன் பத்திரத்தின் முதலீட்டை அதிகரிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments
Post a Comment