தேடுபொறிகளின் கதை

தேடுபொறிகளின் கதை


25 ஆண்டுகளுக்கு முன்னர் தகவல்களை சேகரிப்பது என்பது மிகக் கடினமாக வேலையாக இருந்தது. நூலகம், நேரடியாக சென்று தகவல்களை பெறுவது என பல முறைகளில் தகவல் சேகரிப்பு பணி நடைபெற்று வந்தது. எப்படி கணினி மூலம் புரட்சி நடந்ததோ அதேபோல் 1990-களில் இணையத்தின் மூலமாக தொழில்நுட்ப புரட்சி நடைபெற்றது. இணையம் வந்தவுடன் தகவல்களை ஒரே இடத்தில் கொண்டுவரும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தற்போது விரல் நுணியில் எதைப் பற்றி வேண்டுமானாலும் தகவல்களை பெறும் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேடுபொறி நிறுவனங்களான யாகூ, கூகுள் மாபெரும் வளர்ச்சியை பெற்றிருக்கின்றன. கூகுள் தேடல் இல்லாமல் அணுவும் அசையாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். ஆரோக்கியமான போக்குதான். ஆனால் தற்போது தகவல்களின் நம்பகத்தன்மை குறைந்துவிட்டது என்ற எல்லோர் மனதிலும் எழத் தொடங்கியிருக்கிறது. அதை எப்படி கடந்து வரப்போகிறோம் என்பது கேள்விக்குறி.
தேடுபொறியின் சந்தை
 
# கூகுள் – 80.52 சதவீதம்
# பிங்க் – 6.92 சதவீதம்
# பைடு – 5.94 சதவீதம்
# யாகூ – 5.35 சதவீதம்
தேடு பொறி தேடுதல் எண்ணிக்கை (ஒரு நாளில்)
# கூகுள் 4,46,40,00,000
# பிங்க் 87,39,64,000
# பைடு 58,35,20,803
# யாகூ 53,61,01,505
# மற்றவை 12,84,27,264
> ஒரு நாளில் அனைத்து தேடுபொறிகளிலும் சர்வதேச அளவில் தேடுதல்கள் எண்ணிக்கை 6,586,013,574
 
> இணையத்தில் மொத்த தேடல்களில் 5 சதவீதம் தேடல்களுக்கு பணம் செலுத்தப்படுகிறது.
> ஒரு தேடலுக்கான முடிவுகளை கூகுள் நிறுவன வழங்கும்போது மொத்தம் 200 காரணிகளை கணக்கில் எடுத்துக் கொண்டுதான் நமக்கு முடிவுகளை வழங்குகிறது.
தேடுபொறிகளின் வரலாறு
> `வேர்ல்டு வைடு வெப்’ கண்டறிந்த பிறகு தேடுபொறிகளின் வளர்ச்சி மேம்பட்டது. புதிது புதிதாக தேடுபொறி நிறுவனங்கள் வரத்தொடங்கின.
> 1989–ம் ஆண்டு எப்டிபி என்று கூறப்படும் பைல் டிரான்ஸ்பர் புரோட்டகாலை பயன்படுத்தி `ஆர்க்கி’ எனப்படும் அனைத்து தகவல்கள் அடங்கிய தேடுபொறி உருவாக்கப்பட்டது.
> 1993-ம் ஆண்டு டபிள்யூ3 கேட்லாக், அலிவெப், ஜம்ப் ஸ்டேசன் போன்ற தேடுபொறி நிறுவனங்கள் இயங்கி வந்தன.
> 1995-ம் ஆண்டு யாகூ அறிமுகப்படுத்தப்பட்டது. இணையத்தில் தகவல்களை தேடுவது எளிதானது. அதே சமயத்தில் பல்வேறு துறை குறித்த தகவல்கள் விரல் நுனியில் கிடைக்க துவங்கின.
> 1998-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்றைக்கு தேடுபொறியின் தலைவனாக உயர்ந்து நிற்கிறது.
> ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக தேடுபொறி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
> சமீபத்தில் தொடங்கப்பட்ட தேடுபொறி நிறுவனம் `கிளிக்ஸ்’
> 1999-ம் ஆண்டு இறுதியில் கூகுள் நிறுவனத்தை யாகூ நிறுவனம் 20 லட்சம் டாலர் தொகைக்கு வாங்க முடிவு செய்தது. ஆனால் அந்த ஒப்பந்தம் கைகூடவில்லை.
> 80 மொழிகளில் கூகுள் நிறுவனத்தின் முகப்பு பக்கம் இருக்கிறது.
> கூகுள் நிறுவனத்தின் மொத்த தேடல்களில் 33 சதவீதம் ஸ்மார்ட்போன் மூலம் தேடப்படுகிறது.
சில தேடுபொறி நிறுவனங்கள்
பிங்க்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தேடுபொறி
40 மொழிகளில் இந்த தேடுபொறி இயங்கி வருகிறது.
1998-ம் ஆண்டு எம்எஸ்என் டாட் காம் என்ற பெயரில்தான் இந்த தேடுபொறி தொடங்கப்பட்டது.
பின்பு 2009-ம் ஆண்டு பிங்க் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஆஸ்ப் டாட் நெட் என்ற தொழில்நுட்பத்தில் இந்த தேடுபொறி இயங்கிவருகிறது.
2016-ம் ஆண்டு டிசம்பர் மாத்தின் படி பிங்க் நிறுவனத்தின் வருமானம் 17 கோடி டாலர்
 
பைடு
சீனாவைச் சேர்ந்த இணைய நிறுவனம்.
2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 45,000
சீனாவின் தேடுபொறி சந்தையில் 76 சதவீத சந்தையை பைடு வைத்துள்ளது.
பைடு நிறுவனத்தின் மொத்த வருமானம் 1063 கோடி டாலர்
செயற்கை தொழில்நுட்பம் மூலம் தேடுபொறியை பைடு நிறுவனம் உருவாக்கி வருகிறது

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்