ஒரு நாள் திருவிழா

ஒரு நாள் திருவிழா








வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு நகரத்தில் சந்தை நடக்கும். பல கிராமங்களிலிருந்து சென்று சந்தையில் ஓரளவு குறைந்த விலைக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி வருவார்கள். அந்த நிலை தற்போது மாறிவிட்டது. தற்போது சந்தை சூப்பர் மார்கெட்டுகளாக மாறிவிட்டது. ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் இன்னும் நுகர்வு வேறுமாறியாக உருவெடுத்தது. அதாவது வீட்டிலிருந்தே மளிகை சாமான்கள், பர்னிச்சர்கள், ஆடைகள் என அனைத்தையும் ஆன்லைனில் வாங்கும் பழக்கம் நன்கு வளர்ந்துவிட்டது. இ-காமர்ஸ் நிறுவனங்கள் அடிக்கடி சலுகைகள் வழங்கி வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் வைத்துக் கொள்கின்றனர்.
இதற்கு மேலாக ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விற்பனை திருவிழா வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதம்தான். மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை இந்த விற்பனைத் திருவிழாவை நடத்துகின்றன. அனைத்துப் பொருட்களின் விலையைக் குறைத்து அந்த நாளில் விற்பனை செய்கின்றன. அதனால் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனங்களில் பொருட்களை வாங்கி குவிக்கின்றனர். நிறுவனங்கள் ஒரே நாளில் பல ஆயிரம் கோடி ரூபாயை அள்ளுகின்றன. அப்படி நடந்து கொண்டிருக்கும் விற்பனை திருவிழாக்களை பற்றி சில தகவல்கள்….
சிங்கிள்ஸ் டே
> இந்தியர்களுக்கு பழக்கம் இல்லாத வார்த்தை ஆனால் உலகம் முழுவதும் இந்த வார்த்தை பிரபலம்.
> இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் விற்பனை திருவிழா
> ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11-ம் தேதி இந்த சிறப்பு விற்பனை நடைபெறும்
வரலாறு
> 1993-ம் ஆண்டு சீனாவின் நான்ஜிங் பல்கலைக்கழகத்தில் சிங்கிள்ஸ் டே அல்லது பேச்சிலர்ஸ் டே எனும் பெயரில் திருவிழாவாக கொண்டாடினார்கள்
> அதன்பின் அனைத்துக் கல்லூரிகளிலும் இது முக்கியமான திருவிழாவாக மாறியது.
> இதை அலிபாபா நிறுவனம் தனது விற்பனை உத்திக்கு பயன்படுத்தி கொண்டது.
> அலிபாபா சிங்கிள்ஸ் டே சிறப்பு விற்பனையை முதன் முதலில் தொடங்கிய ஆண்டு 2009
சிங்கிள்ஸ் டே விற்பனை (கோடி டாலரில்)
2013 – 580
2014 – 930
2015 – 1,430
2016 – 1,780
2017 – 2,540
> 2017-ம் ஆண்டு சிங்கிள்ஸ் டே பொருட்களின் எண்ணிக்கை 1.5 கோடி
> மொத்த பிராண்டுகளின் எண்ணிக்கை 1,40,000
> மூன்று நிமிடங்களில் விற்பனையான பொருட்களின் மதிப்பு 150 கோடி டாலர்
பிளாக் பிரைடே
> அமெரிக்க கண்டத்தில் மிக முக்கியமான தினம்.
> ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காவது வாரம் வெள்ளிக்கிழமை பிளாக் பிரைடே கொண்டாடப்படுகிறது.
> இதற்கு முதல் நாளான வியாழக்கிழமை நன்றி செலுத்தும் தினமாக கொண்டாடப்படுகிறது.
> அரசாங்க விடுமுறை கிடையாது. ஆனால் அமெரிக்கர்கள் ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ற நாளாக இதைக் கருதுகின்றனர்.
> மிக சீக்கிரத்தில் கடைகள் அனைத்து திறந்திருக்கும். சிறப்பு சலுகைகளை வாரி வழங்குவர்.
> இ-காமர்ஸ் நிறுவனங்கள் வந்த பிறகு பிளாக் பிரைடே இன்னும் களைகட்டியது.
> அமேசான் நிறுவனம் பிளாக் பிரைடேவை பிரைம் தினம் என்று அழைத்து ஆபர்களை அள்ளி வழங்கியது.
> இந்த ஆண்டு பிளாக் பிரைடே விற்பனை மதிப்பு 503 கோடி டாலர்
> இதில் மொபைல் போன் மூலமாக மட்டும் 200 கோடி டாலர்
> அமேசானில் ஒரு வினாடிக்கு விற்ற பொருட்களின் எண்ணிக்கை 740
> இந்த ஆண்டு விற்பனையால் அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் சொத்து மதிப்பு 10,000 கோடி டாலரைத் தாண்டியது.
பிக் பில்லியன் டே
> இந்தியாவில் நடத்தப்படும் மிகப் பெரிய விற்பனை திருவிழா
> பிளிப்கார்ட் நிறுவனம் ஆண்டு தோறும் இந்த விற்பனைத் திருவிழாவை நடத்துகிறது.
> ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் இந்த திருவிழா நடைபெறும்.
> பிக் பில்லியன் டேவில் ஒரு வினாடிக்கு விற்பனையாகும் பொருட்களின் எண்ணிக்கை 25
> விற்பனையாகும் பொருட்களின் எண்ணிக்கை 1.5 கோடி பொருட்கள்
> அமேசான் இந்தியாவில் பிரத்யேகமாக `தி கிரேட் இந்தியன் சேல்’ என்ற விற்பனைத் திருவிழாவை நடத்துகிறது.

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்