வெற்றி மொழி: சுவாமி விவேகானந்தர்
வெற்றி மொழி: சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர்
1863-ம் ஆண்டு முதல் 1902 -ம் ஆண்டு வரை வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்து மத துறவி, சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர். சிறுவயதிலேயே அதீத நினைவாற்றலுடனும், அறிவுடனும் விளங்கினார். இந்திய தத்துவங்களை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதில் முக்கிய நபராக விளங்கினார். இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரது கருத்துகள் இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தின. 1893-ம் ஆண்டு இவரால் நிகழ்த்தப்பட்ட சிகாகோ சொற்பொழிவு உலகப்புகழ் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
நீ உன்னிடம் நம்பிக்கை வைக்கும்வரை, உன்னால் கடவுளிடம் நம்பிக்கை வைக்க முடியாது.
எழு! விழித்தெழு! இலக்கை அடையும்வரை ஓயாதே.
ஒரு திட்டத்தை கையிலெடு. அந்த ஒரு திட்டத்தையே உனது வாழ்க்கையாக்கு.
நமது எண்ணங்களாலேயே நாம் உருவாக்கப்பட்டுள்ளோம்; எனவே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.
இந்த உலகம் மிகச்சிறந்த உடற்பயிற்சிக்கூடம், நம்மை வலுப்படுத்திக்கொள்ள நாம் இங்கு வந்துள்ளோம்.
நமது இதயங்களிலும் மற்றும் ஒவ்வொரு ஜீவனிலும் நம்மால் கடவுளைப் பார்க்க முடியவில்லை என்றால், அவரை காண வேறு எங்கு செல்ல முடியும்?
இதயத்திற்கும் மூளைக்கும் இடையிலான மோதலில், உங்கள் இதயத்தைப் பின்பற்றுங்கள்.
ஒரு நாளில் நீங்கள் எந்த பிரச்சினையையும் சந்திக்காதபோது – நீங்கள் ஒரு தவறான பாதையில் பயணிக்கிறீர்கள் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள முடியும்.
எல்லா ஆற்றலும் உன்னில் உள்ளது; உங்களால் எதையும் மற்றும் எல்லாவற்றையும் செய்யமுடியும். அதை நம்புங்கள், நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள் என்று நம்பாதீர்கள்.
பலமே வாழ்க்கை, பலவீனமே மரணம்.
ஒருபோதும் முயற்சிக்காதவர்களை விட, போராட்டத்தை சந்திப்பவர்களே சிறந்தவர்கள்.
நான் விரும்பிய எதையும் கடவுள் எனக்கு கொடுக்கவில்லை. எனக்கு தேவையான அனைத்தையும் அவர் கொடுத்துள்ளார்.
நிகழ்காலமானது, நமது கடந்தகால செயல்பாடுகளின் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலமானது, நிகழ்கால செயல்பாடுகளின் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது.
உன் புன்னகையை திருட மற்றவர்களுக்கு எந்த வாய்ப்பினையும் கொடுக்காதே. ஏனென்றால், வாழ்க்கையில் அது மற்ற எதையும்விட மிகவும் மதிப்புமிக்க சொத்து.
Comments
Post a Comment