செயலி மூலம் வாகன காப்பீடு!

செயலி மூலம் வாகன காப்பீடு!

ம்மில் பெரும்பாலானவர்களுக்கு காப்பீடு என்பது ஒரு செலவு மட்டுமே. அது ஆயுள் காப்பீடாக இருந்தாலும் சரி, மோட்டார் காப்பீடாக இருந்தாலும் சரி அனைத்துமே வீண் செலவு என்னும் மனநிலை இருக்கிறது. அதனால் பெரும்பாலானவர்கள் ஆயுள் காப்பீட்டை எடுப்பதில்லை. வாகனங்கள் வாங்கும்போது காப்பீடு கட்டாயம் என்பதால் எடுக்கிறார்கள். ஆனால் அடுத்த ஆண்டில் அவற்றை புதுப்பிப்பதில்லை.
இதற்கு ஒரு தீர்வினை கொண்டுவந்திருக்கிறது ரிநியூபை டாட் காம். (www.renewbuy.com) இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாலசந்தர் சேகர் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். எவ்வளவு வாகனங்களுக்கு காப்பீடு இல்லை, என்ன புதுமை செய்திருக்கிறீர்கள் என்பது குறித்து உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து.
பொதுவாக மோட்டார் பாலிசிகளில் கமிஷன் மிகவும் குறைவு என்பதால் ஏஜென்ட் அது குறித்து அக்கறை எடுத்துக்கொள்வதில்லை.மேலும் ஒரு பாலிசியை புதுப்பிக்க ஒரு நாள் ஆகும் என்பதால் அதில் கவனம் செலுத்துவதில்லை. அதே சமயம் வாகன ஓட்டிகளும் இது குறித்து பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை. அதனால் இந்தியாவில் இருக்கும் 15 கோடி இரு சக்கர வாகனங்களில் 11 கோடி வாகனங்களுக்கு காப்பீடு இல்லை. வாகன ஓட்டிகள் எடுக்க நினைத்தாலும் எந்த பாலிசியை எடுப்பது என்பதில் அவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 80 லட்சம் வாகனங்கள் இருக்கிறது. இதில் 60 லட்சம் வாகனங்களுக்கு காப்பீடு இல்லை. பாலிசி காலம் முடிவடைந்திருந்தாலும் கூட எங்கள் மூலமாக புதிய பாலிசி எடுக்கலாம்
தொழில்நுட்பம் மூலம் ஏஜென்ட் மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்களை நாங்கள் இணைக்கிறோம். எங்களது செயலியை பயன்படுத்தி பல விதமான வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு ஏஜென்ட்கள் வழங்க முடியும். இதில் ஒன்றை தேர்வு செய்யும் பட்சத்தில் அடுத்த சில நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு பாலிசி கிடைத்துவிடும். இதனால் ஒரு ஏஜென்ட் ஒரு நாளில் குறைந்தபட்சம் 5 பாலிசிகளை புதுப்பிக்க முடியும். ஏஜென்ட் இல்லாமல் வாடிக்கையாளர் எங்களிடம் பாலிசி எடுக்க முடியும். ஆனால் ஏஜென்ட்கள் இல்லை என்றால் அதிக நபர்களை சென்றடைய முடியாது என்பதால் ஏஜென்ட்கள் மூலமாகவும் பாலிசிகளை விற்கிறோம்.
பிளஸ் 2 முடித்தவர்கள் கூட எங்களின் ஏஜென்ட் ஆக முடியும். நாங்கள் பாலிசிகள் குறித்து பயிற்சி அளிக்கிறோம். பகுதி நேரமாக பணியாற்றினால் கூட மாதம் ரூ.10,000 சம்பாதிக்க முடியும். காரணம், பாலிசியை எடுக்க பலர் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நேரம் இல்லை. நேரம் இருந்தாலும் தற்போதைய நடைமுறையில் புதிய பாலிசி எடுக்க அதிக நேரம் ஆகிறது. ஆனால் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் விரைவாக பாலிசியை வழங்குகிறோம்.
விரைவில் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் எங்களுடைய சேவையை தொடங்க இருக்கிறோம். தற்போது 60 லட்சம் காப்பீடு செய்யாத இரு சக்கர வாகனங்கள், 20 லட்சம் காப்பீடு செய்த வாகனங்கள், 20 லட்சம் கார்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் மட்டும் 10,000 ஏஜென்ட்களுக்கான வேலை வாய்ப்பை வழங்க முடியும் என பாலசந்தர் சேகர் கூறினார்.

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்