சாலைப் போக்குவரத்து: இந்தியாவுக்கு உதவுகிறது பிரிட்டன்
சாலைப் போக்குவரத்து: இந்தியாவுக்கு உதவுகிறது பிரிட்டன்
இ
ந்தியாவில் சாலைப் போக்குவரத்து மிகவும் சிக்கல் மிகுந்ததாகவே உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை வசதி போடப்பட்டாலும் பெருகிவரும் வாகனத்துக்கேற்ப சாலைகள் மேம்படுத்தப்படவில்லை. இதனால் வாகன நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த விஷயத்தில் தீர்வு காண்பதற்காக பிரிட்டனுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இந்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காண்பதற்கான வழி வகைகளை பிரிட்டன் அளிக்கும்.
இந்த ஒப்பந்தத்தின்படி தொழில்நுட்ப பரிமாற்றங்களை அளிப்பதோடு மிகச் சிறப்பான சாலை போக்குவரத்துக்கான தீர்வுகளையும் பிரிட்டன் இந்தியாவுக்கு வழங்கும்.
பிரிட்டன் அளிக்கும் பரிந்துரைகளின்படி புதிய கொள்கைகளை மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் வகுக்கும் என்று இத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்துத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை அளிப்பது, டேட்டா அனாலிசிஸ் ஆகியன நிர்வகிப்பது தொடர்பான வழிவகைகளையும் பிரிட்டன் அளிக்கும்.
டிஜிட்டல் பரிவர்த்தனை, உயர் திறன் டீசல் வாகனங்கள் மற்றும் பேட்டரி வாகனங்களை இந்தியச் சாலைகளில் செயல்படுத்துவது தொடர்பான வழிவகைகளையும் பிரிட்டன் வழங்கும்.
Comments
Post a Comment