அன்று தொழிலதிபர், இன்று அமெரிக்க அதிபர்!
அன்று தொழிலதிபர், இன்று அமெரிக்க அதிபர்!
அமெரிக்காவின் 45-அதிபராக டெனால்டு ட்ரம்ப் ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். பதவியேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முன்பு அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர்களை விட அதிக சொத்து வைத்திருப்பவர் ட்ரம்ப். அமெரிக்க அதிபராவதற்கு முன்பே தொழிலதிபராக பிஸினஸ் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். கிட்டத்தட்ட உலகம் முழுவதும் டெனால்டு ட்ரம்புக்கு தொழில் முறை பார்ட்னர்கள் உள்ளனர். உலகின் முக்கிய நாடுகளில் ஹோட்டல்கள், தொழில்களை தனது பார்ட்னர்கள் மூலம் ட்ரம்ப் நடத்தி வருகிறார். டிரம்பின் தொழில்கள் குறித்து சில தகவல்கள்…
# டெனால்டு ட்ரம்பின் மொத்த சொத்து மதிப்பு 350 கோடி டாலர்
# பிராண்ட் பிஸினஸ் சொத்துமதிப்பு – 23 கோடி டாலர் (?)
# ரொக்கம் மற்றும் சொந்த சொத்துக்கள் (பர்சனல் அசட்ஸ்) – 27 கோடி டாலர்
# கோல்ப் கிளப் அண்ட் ரிசார்ட்ஸ் – 62 கோடி டாலர்
# ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பு 233 கோடி டாலர்
# மத்திய கிழக்கு நாடான அஜர்பெய்ஜன் முதல் பிரேசில் தலைநகரனான ரியோ டி ஜெனிரோ வரை ட்ரம்புக்கு தொழில்முறை பார்ட்னகள் உள்ளனர்.
# 4 கண்டங்களில், 19 நாடுகளில் ட்ரம்புக்கு சொந்தமான அலுவலக கட்டிடங்கள், ஹோட்டல்கள், கோல்ப் விளையாட்டு மைதானங்கள் உள்ளன.
ட்ரம்பின் முக்கிய சொத்துக்கள்
ட்ரம்ப் டவர், நியூயார்க்

# மொத்த இடம் – 2,44,000 சதுர அடி
# மொத்த மதிப்பு 38 கோடி டாலர்
# 1984-ம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
ட்ரம்ப் இண்டர்நேஷனல் ஹோட்டல்

# அமெரிக்காவில் சிகோகோ நகரில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.
# இதன் மதிப்பு 15 கோடி டாலர்
# இதற்கு உள்ள கடன் 5 கோடி டாலர்
# இந்த ஹோட்டலின் நிகர சொத்து மதிப்பு 10 கோடி டாலர்
# சிகோகோ நகரில் அதிக குற்றங்கள் நிகழும் ஹோட்டல் என்ற குற்றச்சாட்டும் இதன் மீது உண்டு
40 வால் ஸ்ட்ரீட்

# அமெரிக்காவின் நிதி நகரமான நியூயார்க்கில் வால் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ளது.
# மொத்த மதிப்பு 51 கோடி டாலர்
# இந்த கட்டிடத்தின் மீதான கடன் 15 கோடி டாலர்
# நிகர மதிப்பு 36 கோடி டாலர்

# 2011-ம் ஆண்டு போயிங் 757 என்ற மாடல் விமானத்தை ட்ரம்ப் போயிங் விமானம் என்று பதிவு செய்துள்ளார்.
ட்ரம்ப் ஹெலிகாப்டர்

# ட்ரம்ப் என்76டிடி என்ற சொகுசு ஹெலிகாப்டரை வைத்துள்ளார்.
# இதன் மதிப்பு 70 லட்சம் டாலர்
# 12 பயணிகள் அமரும் வகையில் இந்த ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
# நியூயார்க் லாங்க் ஐலேண்ட் என்ற நிறுவனம் இந்த விமானத்தின் உட்புறத்தை வடிவமைத்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள டிரம்பின் சொத்துகள்
# ட்ரம்ப் ஹோட்டல்- ரியோ டி ஜெனிரியோ
# ட்ரம்ப் ஒசேன் கிளப் பனாமா சிட்டி – பனாமா
# ஒசேன் ரிசார்ட் பஜா- மெக்ஸிகோ
# 555 கலிபோர்னியா ஸ்ட்ரீட்- சான்பிரான்சிஸ்கோ
# ட்ரம்ப் இண்டர்நேஷ்னல் கோல்ப் கிளப் – துபாய்
இந்தியாவும் டிரம்பும்
# 2016-ம் ஆண்டு புணே நகரத்தில் ட்ரம்ப் டவர் அமைக்கப்பட்டுள்ளது.
# முற்றிலும் வீடுகள் உள்ள கட்டிடமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
# மும்பையில் ட்ரம்ப் டவர் 2018-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்படும்.
# கொல்கத்தாவில் ட்ரம்ப் முதலீட்டில் பெயரிடப்படாத திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் முக்கிய தொழில்முறை பார்ட்னர்கள்
ஹாரி டனோஸிடிப்ஜோ
# இந்தோனேசியாவைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர்
# ட்ரம்புக்கு சொந்தமான சொகுசு ரிசார்ட்களின் பங்குதாரராக உள்ளார்.
# இவரின் மொத்த சொத்துமதிப்பு 115 கோடி டாலர்
ராபி அண்டோனியோ
# செஞ்சூரி பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.
# பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்.
# ட்ரம்ப் நிறுவனத்துடன் 15 கோடி டாலர் மதிப்புள்ள கட்டிடத்தை நிறுவி வருகிறார்.
# கடந்த மூன்று மாதங்களாக இவருக்கும் ட்ரம்புக்கு உள்ள உறவு நெருக்கமாகி உள்ளது.
அபிஷேக் லோதா
# லோதா டெவெலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபிஷேக் லோதா
# இந்தியாவில் முதன் முறையாக் ட்ரம்ப் டவரை அபிஷேக் லோதாவுடன் இணைந்து ட்ரம்ப் நிறுவனம் அமைத்துள்ளது.
# உலகம் முழுவதும் உள்ள ட்ரம்பின் தொழில்முறை பார்ட்னர்களின் எண்ணிக்கை 36
Comments
Post a Comment