வீட்டு விசேஷங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை ஆன்லையின் மூலம் வாடகைக்கு கொடுக்கும் RentSher ஸ்டார்ட் அப்

வீட்டு விசேஷங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை ஆன்லையின் மூலம் வாடகைக்கு கொடுக்கும் RentSher ஸ்டார்ட் அப் 


rentsher

RentSher நிறுவனம் பிறந்தநாள், அலுவலக நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்கள், பள்ளி நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகள், பண்டிகைகள், அபார்ட்மெண்ட் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஆடைகள், உபகரணங்கள்,அலங்கார பொருட்கள், மின்னணு பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை டெல்லி மற்றும் பெங்களூர் நகரங்களில் ஆன்லையின் மூலம் வாடகைக்கு கொடுக்கிறது. மின்னணு பொருட்கள் பொருட்களான கணினி, புரஜக்டார் (Projector), மடிக்கணினி, மோடம் (modem) , கேமரா, தொலைகாட்சிகள், ஸ்பீக்கர்கள், அலங்கார உடைகள் போன்றவற்றை ஆன்லையின் மூலம் டெல்லி மற்றும் பெங்களூர் நகரங்களில் வாடகைக்கு விடுகிறது.


விசேஷங்களுக்கு தேவையான அலங்காரங்கள் (decorations), உடைகள் (costumes) போன்றவற்றை வாங்குவதை விட வாடகைக்கு பெறுவது விலை குறைவாக இருக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருக்கிறது என்ற  நம்பிக்கையுடன் 2014 ஆம் ஆண்டு RentSher நிறுவனம் அபிஜித் ஷா, ஹர்ஷ் தன்த் மற்றும் கரண்தீப்  எஸ் வோரா என்பவர்களால் தொடங்கப்பட்டது. 
InMobi இணை நிறுவனர் அபய் சிங்கால், Nimbuzz chief operating officer சோபி  பாபு , Philips India பொது மேலாளர் அபிஷேக் ஆச்சார்யா, மனிஷ் ஷா, வைபவ் தோஷி, விபு கர்க் போன்றோர்கள் RentSher நிறுவனத்தில் $3 இலட்சம் டாலரை முதலீடாக செய்துள்ளனர். 
பெற்ற இந்த $3 இலட்சம் டாலர் முதலீட்டு தொகையை வைத்து பொருட்களின் மேம்பாடு, தேவையை நிறைவேற்றுதல், நிறுவன வளர்ச்சி போன்றவற்றிற்கு பயன்படுத்தப்போவதாக RentSher நிறுவனம் தெரிவித்துள்ளது.    

தொழில் மாதிரி (Business Model)

விசேசங்களுக்கு  தேவையான பொருட்களை வாடகைக்கு கொடுக்கும் உரிமையாளர்களையும் மற்றும்  விற்பனையாளர்களை RentSher நிறுவனம்தங்களிடம் இணைத்துள்ளது. வாடகைக்கு பொருட்கள் தேவைபடுவோர் அதற்கான கட்டணம் முன்பணமாகவோ அல்லது விநியோகிக்கும் நேரத்திலோ செலுத்தலாம். பொருட்களின் விநியோகங்களை (delivery services) RentSher நிறுவனம் செய்கிறது.
தங்களுக்கு தேவையான கமிசன் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறாமல் பொருட்களின் உரிமையாளர்களிடமிருந்து அவர்களுக்கான வாடகையில் 20 சதவீதத்தை கமிசனாக பெறுகிறது.    

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்

பழச்சாறு தயாரிப்பு!