பெண்கள் தொழில் முனைவோர்கள் தங்களின் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவையை விற்க மத்திய அரசின் Mahila E-haat ஆன்லையின் தளம்

பெண்கள் தொழில் முனைவோர்கள் தங்களின் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவையை விற்க மத்திய அரசின் Mahila E-haat ஆன்லையின் தளம்


Mahila E-haat

பெண்கள் நாட்டின் மற்றும் வீட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றுகின்றனர். நாட்டில் பல பெண்கள் தொழில்முனைவோர்களாக உள்ளனர். பெண் தொழில்முனைவோர்களை மேம்படுத்தும் மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு Mahila E-haat என்ற ஆன்லையின் தளத்தை உருவாகியுள்ளது. Mahila E-haat ஆன்லையின் தளத்தின் மூலம் பெண்கள் தங்களின் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவையை நேரடியாக எவ்வித கட்டணமும் இல்லாமல் சந்தைப்படுத்திக் கொள்ளலாம். 

Mahila E-haat
Mahila E-haat  பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Women and Child Development) இந்த தளத்தை தொடங்கியது. பெண்தொழில்முனைவோர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் சேவையை எவ்வித இடைத்தரகரும் இல்லாமல் கட்டணமின்றி Mahila E-haat தளத்தில் சந்தைப்படுத்தலாம். வாங்குபவர்கள் இந்த தளத்தின் மூலம் விற்பனையாளர்களை தொடர்புகொண்டு வாங்கிக்கொள்ள முடியும்.
பட்டியலிடக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகள்
Mahila E-haat தளத்தில் பல பொருட்கள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்தலாம். குறிப்பாக ஆடைகள், நகைகள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், ஃபேஷன் பொருட்கள், பைகள், கூடைகள், பெட்டிகள், தரை விரிப்புகள், மசாலா, பருப்பு வகைகள், அப்பளம், ஊறுகாய் போன்ற மளிகைப் பொருட்கள், அலங்கார மற்றும் பரிசு பொருட்கள், மட்பாண்டம் பொருட்கள்,தொழில்துறை உற்பத்தி மற்றும் இதர சேவைகளை பெண்தொழில்முனைவோர்கள் Mahila E-haat தளத்தில் பட்டியலிட்டு சந்தப்படுத்தலாம்.
பதிவு செய்யும் முறை 
பெண்கள் தங்கள் பொருட்கள் மற்றும் சேவையை சந்தைபடுத்தி விற்பனை செய்ய mahilaehaat-rmk.gov.in தளத்தில் சென்று Join Us என்ற பட்டினை அழுத்தி அதில் வரும் படிவத்தை பூர்த்திச் செய்யவேண்டும். இந்த படிவத்தில் பொருட்கள் விற்பனையாளர் பற்றிய தகவல்களையும், பொருட்களின் தகவல்களை கொடுக்க வேண்டும்.




Comments