போட்டியில்லாத தொழில் - என்னுடைய சாெந்த தயாரிப்பு



போட்டியில்லாத தொழில் - என்னுடைய சாெந்த தயாரிப்பு


இன்றைய நவீன உலகில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் ஏராளம். மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் பொருட்களால் இயற்கையும், சுற்றுச்சூழலும் மிக வேகமாக மாசுபட்டு வருகின்றன. இதுவே, பல்வேறு நோய்களுக்கும் காரணமாக அமைகின்றன.



 இதன் காரணமாகவே, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டில் கூட, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கூட, பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான பரப்புரைகளும், விழிப்புணர்வுகளும் அதிகரித்து வருகின்றன.

 இந்த நிலையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வந்திருப்பதுதான் நான் ஓவன் எனப்படும் துணி போன்ற காகிதங்கள். இவை பார்ப்பதற்கு பிளாஸ்டிக் போன்றே அழகாகவும், பல வண்ணங்களிலும் காட்சிகளிக்கின்றன. பயன்படுத்துவதற்கு காகிதம் போன்றும், துணி போன்றும் இலகுவாக உள்ளன. இவை, பார்ப்பதற்கு துணி போன்று இருந்தாலும், பருத்தியை பயன்படுத்தி நூல்களால் நெய்யப்படுவது இல்லை. பாலி புரொப்பலீன் என்ற வேதிப் பொருளால் இவை தயாரிக்கப்படுகின்றன.

 குருணை வடிவிலான பாலி புரொப்பலீன் வேதிப் பொருளை, சூடு படுத்தும்போது, அவை சூடாகி, உருகுகின்றன. அதனை ஒரே சீரான வேகத்தில் சுழுலும் இரு உருளைக்கு இடைவே வைத்துஅழுத்தம் கொடுக்கும்போது, அவை துணி போல் இலகுவாக மாறுகின்றன. பிளாஸ்டிக் பொருட்களை போன்று, இவை உறுதியானவை. காற்று மற்றும் தண்ணீர் புகும் திறன் கொண்டவை. குறிப்பாக, மண்ணில் மட்கும் திறன் கொண்டவை என்பதால், இவற்றால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதன் காரணமாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக நான் ஓவன் தயாரிப்புகள் இடம்பிடித்து வருகின்றன.

 மூலப்பொருட்கள், எந்திரங்கள்

 நான் ஓவன் பொருட்கள் குறிப்பிட்ட நீள, அகலங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. நமது தேவைகளுக்கு ஏற்ப நாம் தான் அதனை துண்டு துண்டாக வெட்டி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவை, GSM அதாவது GRAM PER SQUARE METRE என்ற அலகினால் கணக்கிடப்படுகின்றன.

 நாம் தயாரிக்கும் பொருளை பொருத்து, அதன் GSM மாறுபடும். நான் ஓவன் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து இவை பெரிய பெரிய உருளை வடிவங்களில் பார்சல் செய்து அனுப்பப்படுகின்றன. இவற்றை இதன் விற்பனை மையங்களில், குறிப்பிட்ட கிலோ கணக்கில்தான் நாம் வாங்க முடியும். நான் ஓவனை நமது தேவைக்கு தகுந்தாற்போல், அளவெடுத்து வெட்டுவதற்கும், அவற்றை கொண்டு பொருட்களை தயாரிப்பதற்கும் பல்வேறு வகையான இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 குறிப்பாக, நான் ஓவனை அளவெடுத்து வெட்டுவதற்கு டேபிள், மெஷின் கட்டர் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. வெட்டப்பட்ட நான் ஓவன்களை நமக்கு தேவையான பொருட்களாக மாற்றுவதற்கு தையல் மெஷின் போன்ற சீல்ட் மற்றும் ஸ்டிச்சிங் மெஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது செமி ஆட்டோமேட்டிக் தயாரிப்பு முறை என்று அழைக்கப்படுகிறது.

 இதுதவிர, நான் ஓவனை இயந்திரங்களில் இணைத்துவிட்டால், அவையே அளவெடுத்து தேவையான அளவுகளில் வெட்டி, தேவையானப் பொருட்களை தயாரித்து, வெளியே அனுப்பி விடுகின்றன. இது ஆட்டோமெடிக் தயாரிப்பு முறை என்று அழைக்கிறது.

 தயாரிப்பு முறைகள்


 நான் ஓவன் தயாரிப்பு முறையை 3 பிரிவுகளாக பிரிக்கலாம்.

 1. கட்டிங் முறை :

 நமக்கு தேவையான அளவுகளை நாம் அளவு எடுத்து அதனை வெட்டிக் கொள்வது. இதற்கான பிரத்யேக டேபிள் ஒன்று உள்ளது. இதன் ஒருபுறத்தில், நான் ஓவன் உருளையை பொருத்தும் வகையில், இரும்புக் கம்பி ஒன்று உள்ளது. இதன் வழியாக நான் ஓவனை டேபிளில் அடுக்கடுக்காய் விரித்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் நமக்கு தேவையான வகைகளில் நான் ஓவனை அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பிறகு, துண்டு துண்டாக அவற்றை வெட்டிக் கொள்ளலாம்.

 2. சீலிங் முறை:


 தையலுக்குப் பதிலாக \\\"டை\\\" எனப்படும் பிரத்யேக உருளை மூலம் அழுத்தம் கொடுத்து, நான் ஓவனின் இரண்டு புறங்களை இணைப்பது.

 3 ஸ்டிச்சிங் முறை (தையல் முறை) :

 தையல் இயந்திரத்தில் உள்ளது போன்று, ஊசி மூலம் நான் ஓவனை தைப்பது. சந்தை வாய்ப்புகள் நான் ஓவனின் இலகுவான தன்மை, காற்று மற்றும் தண்ணீர் புகும் திறன், பிளாஸ்டிக் போன்ற உறுதி போன்றவை, மருத்துவத்துறைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.

 இதன் காரணமாக, அவை முதலில் மருத்துவத்துறையில் தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன. அறுவைச் சிகிச்சைகளுக்கு, குறிப்பாக பிரசவம் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் வகையில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு, தூக்கி எறிந்துவிடும் வகையில் நான் ஓவன்களின் பயன்கள் இருந்தன.

 அதனால், தற்போது மருத்துவமனைகளில் படுக்கை விரிப்பான்கள், மருத்துவர்களின் கையுறைகள், அறுவைச் சிகிச்சைப் பிரிவில் அணியும் உடைகள், முகக் கவசம் போன்றவை நான் ஓவன்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இதுதவிர, ஆயத்த ஆடைகள் தயாரிப்புத்துறையிலும் நான் ஓவன்கள் முக்கிய இடத்தை பிடிக்கின்றன.

 முந்தைய காலங்களில் ஆயத்த ஆடைகள் துறையில் பயன்படுத்தப்பட்டு வந்த காடாத்துணி அல்லது கேன்வாஸ் போன்றவற்றுக்குப் பதிலாக தற்போது நான் ஓவன் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்களின் கோட்டின் உட்புறம், சட்டையின் காலர் போன்றவற்றில் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. சமையல் அறைகளில், வியர்வைத்துளிகள் மற்றும் தலை முடிகள் கீழே விழாமல் இருப்பதற்காக தலையில் அணியும் கவசமாக நான் ஓவன்கள் பயன்படுகின்றன.

 பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் தயாரிக்கவும் நான் ஓவன்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது அனைத்துக் கடைகளிலும், பாலிதீன் பைகளுக்கு மாற்றாக நான் ஓவன் பைகள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

 இதுதவிர, தாம்பூலப் பை, தலையணை உறை, வாகனங்களின் சீட் கவர், கம்யூட்டர் கவர், ஜன்னல் திரைகள், திரைச்சீலைகள், டேபிள் விரிப்புகள் என எங்கெங்கும் நான் ஓவனின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்