காடை வளர்ப்பு - Kaadai Valarpu
காடை வளர்ப்பு - Kaadai Valarpu அசைவப் பிரியர்கள்… ஆடு, கோழிக்கு அடுத்தபடியாக விரும்புவது காடை இறைச்சியைத்தான். அதனால், காடைக்கு எப்போதும் விற்பனை வாய்ப்பு உண்டு. இதைச் சரியாகப் புரிந்துகொண்டு ஜப்பான் காடை வளர்ப்பில் ஈடுபட்டு பலர், நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பேரூராட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன். காடைக் குஞ்சுப் பொறிப்பகத்தில், இன்குபேட்டரில் முட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த ராஜேந்திரனைச் சந்தித்தோம். ”முன்னாடி மாற்றுமுறை வைத்தியம் செய்துக்கிட்டிருந்தேன். அதுல பெருசா வருமானம் இல்லாததால, கூடுதல் வருமானத்துக்காக ‘லவ் ஃபேர்ட்ஸ்’ வாங்கி வளர்த்து விற்பனை செய்துக்கிட்டிருந்தேன். அதுலயும் நிறைய சிக்கல்கள். இதனால வான்கோழிக் குஞ்சு உற்பத்திக்கு மாறினேன். கூடவே, கறிக்கோழியையும் வளர்க்க ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல மனைவிக்கு வேலை கிடைச்சு, வெளியூருக்குப் போக வேண்டி இருந்ததால, அந்தத் தொழிலையும் விட்டுட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு, எங்க ஊருக்கே மாற்றலாகி...
சூப்பர்
ReplyDelete