நீங்களும் துவங்கலாம் பருப்பு மில்!! விற்பனையில் 8- 10% லாபம்!

துவங்கலாம் பருப்பு மில்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது உணவிலும் முக்கிய அங்கம் வகிப்பது பருப்பு வகைகள். நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து பல வகையான பருப்புகளில் இருந்துதான் கிடைக்கிறது. நான்-வெஜ் பிரியர்களுக்கு வேண்டுமானால், பருப்பின் அருமை தெரியாமல் இருக்கலாம்.
ஆனால், சைவ உணவு விரும்பிகளுக்கு பருப்பு இல்லை என்றால், சாப்பாடு இறங்காது. குழம்பு, சாம்பார், கூட்டு, பொறியல் என பல வெரைட்டிகளிலும் பயன்படுத்தப்படும் இந்த பருப்புகளைத் தரம் பிரித்து, சுத்தப்படுத்தி, தயார் செய்து கொடுக்கும் பருப்பு ஆலைகள் (தால் மில்) இப்போது சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன.
சந்தை வாய்ப்பு!
உலகளவில் பருப்பு வகைகளை உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை அதன் தேவை அதிகமாகவே இருக்கிறது. நம்நாட்டைப் பொறுத்தவரை நபர் ஒன்றுக்கு ஆண்டுக்கு 2.8 கிலோ பருப்பு தேவை. பொதுவாக அரிசி மில்களை நடத்துபவர்களே பருப்பு ஆலைகளையும் சேர்த்து நடத்துகிறார்கள். தனியாக பருப்பு ஆலையை நடத்தினால் ஜெயிக்க அதிக வாய்ப்பு உண்டு.

பருப்பு வகைகள்!
பச்சைப் பயிறு, கொண்டைக் கடலை, பச்சை மொச்சை, கறுப்பு மொச்சை, துவரம் பருப்பு, வெள்ளைப் பட்டாணி, தட்டை பயிர், காராமணி, பச்சைப் பட்டாணி உள்ளிட்ட பருப்பு வகைகள் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுவதால் பருப்பு ஆலையின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.




மேலும்  தகவலுக்கு இந்த லிங்கை பயன்படுத்திக்காெள்ளுங்கள் :

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்