வெறும் 4 இலட்சம் ரூபாயில் தொடங்கப்பட்டு 15.5 பில்லியன் டாலர் நிறுவனமாகிய ப்ளிப்கார்டின் (FlipKart) வெற்றிக் கதை

வெறும் 4 இலட்சம் ரூபாயில் தொடங்கப்பட்டு 15.5 பில்லியன் டாலர் நிறுவனமாகிய ப்ளிப்கார்டின் (FlipKart) வெற்றிக் கதை


ப்ளிப்கார்ட்

ப்ளிப்கார்ட் (Flipkart) வெறும் 4 இலட்சம் மற்றும் இரண்டு கணினியுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் இப்பொது 15.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ப்ளிப்கார்டை (Flipkart) சச்சின் பன்சல் (Sachin Bansal) மற்றும் பின்னி பன்சல் (Binny Bansal) ஆகியோர் 2008-ஆம் ஆண்டு பெங்களூரில் தொடங்கினார்கள். இ – காமர்ஸ் (E-Commerce) வணிக மாதிரி (Business Model) போன்ற தொழில்கள் ஏற்கனவே இருந்தாலும், தங்களுக்கு தோற்றிய யோசனையை நம்பிக்கையாக மாற்றியதும், நம்பிக்கையை செயலாக மாற்றியதும், செயல்களை முடிவாக (Results) மாற்றியதே சச்சின் பன்சால் மற்றும்  பின்னி பன்சாலின் வெற்றிக்கு காரணம்.  சிறந்த நண்பர்கள். IIT-டெல்லியில் படித்தவர்கள். அமேசானில் (Amazon) பணி புரிந்து வந்த இவர்களின் ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் இப்பொது 33,000* பேர் பணி புரிந்து வருகிறார்கள்.
ப்ளிப்கார்ட்
அமேசானில் (Amazon) நிறுவனத்தில் பணி புரிந்து வந்தாலும் இவர்களின் எண்ணம் கூகுள் போன்ற ஒரு search engine உருவாக்க வேண்டும் என்பதே , ஒருமுறை ஆன்லைனில் பொருட்களின் விலை பட்டியல் ஒப்பிட்டுபார்த்து கொடுக்கும் இணையதளத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டார்கள். அபோது தான் இந்தியாவில்  இ-காமர்ஸ் (E-Commerce) நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு  மிக மோசமான சேவை அளிப்பதை  கண்டார்கள் . நம் ஏன் ஒரு இ-காமர்ஸ் இணையதளம் உருவாக்ககூடாது என்ற எண்ணம் வந்தது, ப்ளிப்கார்ட் (Flipkart) தொடங்கப்பட்டது.
இவர்கள் முதலில் விற்பனை செய்தது புத்தகம். புத்தகத்தை  தங்கள் ஸ்கூட்டரில்  சென்று வழங்கி வந்தார்கள். இப்பொது ப்ளிப்கார்ட் விற்பனை செய்யாத பொருள்கள் மிக குறைவு .
ப்ளிப்கார்ட் (Flipkart) தொடங்கப்பட்ட போது, எல்லா இ-காமர்ஸ் நிறுவனமும் சந்திக்கும் சிரமங்களை எதிர்நோக்கியது.  ஒன்று ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பொருட்கள் பெறுவதை மக்கள் விரும்பவில்லை. அதனால் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறையை (Online Payment Gateways) நிறுவுவதில் சிரமத்தை எதிர்கொண்டார்கள். இரண்டாவது பிரச்சினை பொருட்களின் விநியோக அமைப்பு முறை (supply chain system).  குறிப்பிட்ட  நேரத்தில் பொருட்களை கொண்டு சேர்பதிலே இ-காமர்ஸ் நிறுவனங்களின் வெற்றி அடங்கி இருக்கிறது. முதலில் ஃப்ளிப்கார்ட்  தங்கள் சொந்த விநியோக  அமைப்பு முறையை  நிறுவி பொருட்களை உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்தார்கள்.


புத்தக விற்பனையாளர்களிடம் இணைப்பை (Tie-ups) ஏற்படுத்துவது, திறமையான மேலாண்மை  குழுவை அமைப்பது, தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது போன்றவை ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு சவாலாக இருந்தது. Binny Bansal Appointed Flipkart New CEO
2009-ஆம் ஆண்டு Accel Partners முதலீட்டு நிறுவனத்திடமிருந்து 1 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாகவும், 2010-ஆம் ஆண்டு Tiger Global முதலீட்டு நிறுவனத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாகவும், 2012-ஆம் ஆண்டு 150 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாகவும்,  2013-ஆம் ஆண்டு 360 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாகவும், ப்ளிப்கார்ட் (Flipkart) பெற்றது. அந்த ஆண்டு PayZippy என்ற ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் நிறுவனத்தை தொடங்கியது. அதே ஆண்டு தனது மொபைல் பயன்பாட்டை (Mobile Apps) தொடங்கியது.  2014-ஆம் ஆண்டு மற்றொரு இ-காமர்ஸ் நிறுவனமான Mytraநிறுவனத்தை 300 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கி தன்னுடன் இணைத்துகொண்டது. ஆகஸ்ட்,2015 -ஆம் ஆண்டு  வரை 12 சுற்றுகள், 16 முதலீட்டு நிறுவனத்திடமிருந்து (Investors) கிட்டத்தட்ட 3 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாக பெற்றுள்ளது. 
Flipkart நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து தலைமை நிர்வாக அதிகாரியாக (Chief Executive Officer) சச்சின் பன்சால் (Sachin Bansal)  செயல்பட்டு வந்தார். இப்போது  புதிய தலைமை செயல் அதிகாரியாக (Chief Executive Officer) அதன் இணை நிறுவனரான (Co-Founder) பின்னி பன்சாலை (Binny Bansal) நியமிக்கப்பட்டுள்ளார். 
வெறும் 4 இலட்சம் ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட ப்ளிப்கார்ட் (FlipKart)  நிறுவனம் இன்று இந்தியாவின்  ஆன்லைன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்

பழச்சாறு தயாரிப்பு!